சொந்த நாட்டில் இனவழிப்பிலிருந்து உயிர்தப்பி யேர்மனியில் அகதி;க் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருக்கும் ஈழத்தமிழர்களை மீண்டும் சிறிலங்கா
கொலைக் களத்துக்கு நாடுகடத்தும் செயல்பாட்டை யேர்மன் அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரி, நாளை 15.06.2014 அன்று காலை 11 மணிக்கு யேர்மன் Düsseldorf நகரில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யேர்மனியில் அகதித் தஞ்சக் கோரிக்கையை கேட்டுநிற்கும் பல ஈழத்தமிழர்களின் நிலைமை பல வருடங்களாக எவ்வித பதில்களும் இன்றி இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் நிலை காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை, ஆங்காங்கே சில நாடுகடத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை ஈழத்தமிழர் மத்தியில் பெரும் ஏமாற்றமாக உள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் ஈழத்தமிழர்கள் இன்றும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள். நாளாந்தம் கடத்தல்கள், கொலைகள், சிறையடைப்புக்கள், அரசியற் பழிவாங்கல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எமது மக்கள் நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள். சிறிலங்காவில் ஊடக அடக்குமுறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் உட்பட மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்துவருவதாக பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் சிறிலங்கா அரசுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் எழுப்பியுள்ள நிலையிலும், பல்வேறு நாடுகளில் இருந்து இன்றும் ஈழத்தமிழ் அகதிகள் தொடர்ச்சியாக அகதித் தஞ்சக் கோரிக்கைகள் மறுக்கப்பட்டு சிறிலங்கா கொலைக்களத்துக்கு நாடுகடத்தப்பட்டு வருவதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
யேர்மனியில் அகதித் தஞ்சக் கோரிக்கைக்கு பல வருடங்களாக எந்தவிதப் பதிலும் இன்றி வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் அகதிகள், தாம் திருப்பி அனுப்பப்படுவார்களோ என்ற அச்சத்தில் உளவியல் பாதிப்புக்குட்பட்டு வாழ்ந்துவருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்புக்காக மனிதாபிமான அடிப்படையில் யேர்மன் அரசாங்கம் இவர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்துவதோடு, இவர்களுடைய அகதித் தஞ்சக் கோரிக்கையை கருத்திலெடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருவதற்காக நாளை நடைபெற இருக்கும் பேரணியில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றோம் .
யேர்மன் மற்றும் ஏனைய நாடுகளில் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்படும் ஆபத்தில் வாழும் தமிழ் மக்கள் யாவரும் சர்வதேச மனிதவுரிமை அமைப்பான 'பிரேமனை' தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத் தருகிறோம். ஈழத்தமிழ் அகதிகள் விடையமாக நீண்ட நிபுணத்துவதை கொண்ட சர்வதேச மனிதவுரிமை அமைப்பான 'பிரேமன்' உடன் உடனடியாக தொடர்புகொண்டு, தங்களுக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தலுக்கு எதிரான அழுத்தங்களை வழங்குவதன் மூலம் நாடுகடத்தும் ஆபத்தில் உள்ளவர்களைப் பாதுகாக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, நாடுகடத்தப்படும் ஆபத்தில் உள்ளோர் உலகில் எங்கிருந்தாலும், ஈழத்தமிழருக்காக உதவிவரும் சர்வதேச மனிதவுரிமை அமைப்பான பிரேமனை பின்வரும் தொலைபேசி இலக்கமூடாகத் தொடர்புகொள்ளவும் : 00491774062220
பேரணி விடையமாகத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் :
தமிழ் மனிதநேயப் பணிக்காகன குழு:
015171169461 - 017634935550 - 015221072991
தகவல்:-
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.

பேரணி ஆரம்பிக்கும் இடம் : Düsseldorf தொடருந்து நிலையம்
நேரம் : 11 மணிக்கு
முடிவடையும் இடம் : Graf - Adolf Platz
40213 Düsseldorfபேரணி விடையமாகத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் :
தமிழ் மனிதநேயப் பணிக்காகன குழு:
015171169461 - 017634935550 - 015221072991
தகவல்:-
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.
No comments:
Post a Comment