June 13, 2014

கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் களத்தில் மூன்று தமிழர்கள்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி தொகுதியில் சண் தயாபரனும் களத்தில் குதித்துள்ளனர். இத்தேர்தல்களின் முடிவுகள் இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி காலை 10 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment