June 13, 2014

டென்மார்க் வைல நகரில் தமிழர் விளையாட்டு விழா

டென்மார்க் வைல (vejle) நகரில் 14.06.2014 அன்று தமிழர் விளையாட்டு விழா பெரும் கலகலப்புடன்  வெகுசிறப்பாக நடைபெறயிருக்கின்றன.


தாச்சிப் போட்டி, முட்டிஉடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட கரப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்கள் மற்றும் பலவகை வேடிக்கை விநோத விளையாட்டுக்கள் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று மகிழ்வுட்டும் விளையாட்டுகள் என்பன இடம்பெறும்.

எமது பாரம்பரிய விளையாட்டுக்களை டென்மார் வாழ் எமது இளம் தலைமுறையினர் மிகவும் விருப்புடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றார்கள்.

தாயகச் சுவையுடன் ஓடியல் கூழ், அப்பம், தோசை உட்பட பலவகை உணவுவகைகளும், சிற்றுண்டிகளும் குளிர்பாணங்களும் பரிமாறப்பட்டவுள்ளன. டென்மார்க்கின் முன்னணி தமிழ் வணிகர்களின் சிறப்புத் தள்ளுபடி விலையிலான விற்பனைகளும் இடம்பெறவிருக்கின்றன.

நாள் : 14.06.14
நேரம் :  09.00
இடம் : Nørremarks vej 157
            Bredballe 7120 Vejle

தொடர்புகளுக்கு, டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறை - 60471159

No comments:

Post a Comment