போரின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் பிரகடனத்தில் சிறீலங்காவும் கைச்சாத்திடும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.பாலியல்
வன்முறையை தடுக்காமல் எந்தவொரு நாடு மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளமுடியாது
பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த பிரகடனத்தில் 4 இல் 3 வீத உலக நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.இந்தநிலையில் இலங்கையும் அதில் கையொப்பமிட வேண்டும் என்று கோருவதாக இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடுவது தார்மீக பொறுப்பு மாத்திரமல்ல. வெளிநாட்டுக்கொள்கையிலும் செல்வாக்கை செலுத்தும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்முறையை தடுக்காமல் எந்தவொரு நாடு மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment