தமிழ்நாட்டிலுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் மாதாந்த மானியம் வழங்காததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990ம் ஆண்டில் நிறுவப்பட்டது.
தற்போது 420 குடும்பங்களைச் சேர்ந்த 1700க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்றான மானியம் வழங்குதலில் குடும்பத் தலைவருக்கு ரூ.1000மும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.750ம் அதற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் (இந்திய ரூபாய்) வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மானியத்தை மாத முதல் அல்லது 2ம் திகதியில் வழங்கி வந்தனர். நாளடைவில் 5ம் திகதி வரை தள்ளிபோய் தற்போது 14ம் திகதி வரை வழங்கப்படவில்லை. இதனால் தனியாக உள்ள வயது முதிர்ந்தவர்கள் மானியமும் வரவில்லை மாதாந்த உதவித்தொகையும் வரவில்லை என்ற ஏக்கத்தில் உள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என அகதிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment