June 15, 2014

அரசாங்கத்தால் எமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது -வினோ!



 தமிழ் தேசியக்கூட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ள போதும் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் சரியான
முடிவுகளையெடுத்து வருகின்றோம் என்று நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ள போதும் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடையங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொண்டு வருவதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பா மோட்டை கிராமத்தில் உள்ள க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் வரிய மாணவர்களுக்கு மன்னார் இந்து முதியோர் நற்பணி மன்றத்தினால் இலவச கணித பாட வகுப்பு ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று பாப்பாமோட்டை பொது மண்டபத்தில் இடம் பெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்-தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது.ஆனால் சரியான நேரத்தில் மக்களின் உரிமைகள் தொடர்பில் சரியான முடிவுகளை நாம் எடுத்து வருகின்றோம்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, மக்களின் விடுதலை போன்றவற்றிற்கு நாம் முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாங்கள் கூட்டாக செயற்பட்டு சரியான முடிவுகளை எடுத்து வருகின்றோம்.
இந்த நிலையில் எங்களில் யாரும் குற்றம் காண முடியாது.
அரசாங்கத்தினால் எமது உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.நாங்கள் அஞ்சவில்லை.தமிழ் மக்கள் தொடர்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து வருகின்றனர்.
இந்த வகையிலே மாகாண சபையினை நாம் கைப்பற்றியுள்ளோம்.மாகாண சபைக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்களை வைத்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முயற்சிக்கின்றோம்.
-தேர்தல் காலங்களில் மாத்திரமே வாக்குகளுக்காக வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அவர்களின் ஆதங்கங்களை எம்மால் புறிந்து கொள்ளக்கூடியாதாக உள்ளது.எங்களினால் அபிவிருத்தி,வேளைவாய்ப்புக்களை வழங்க முடியாது.அரசாங்கத்ததை எதிர்த்து நிற்கும் நாங்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.இந்த நிலையில் கலந்து கொண்ட மக்கள் தமது பிரச்சினைகளையும் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.


No comments:

Post a Comment