June 15, 2014

முல்லை மல்யுத்த வீரர்களை வழியனுப்பி வைத்தார் ரவிகரன்!



முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமையில் தேசிய மட்டப்போட்டிக்கு செல்லும் மல்யுத்த வீரர்கள்
நேற்று நுவரெலியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
மாகாண மட்ட மல்யுத்த போட்டிகளில் வெற்றியீட்டி அகில இலங்கை மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் முல்லைத்தீவை சேர்ந்த அவ் 5 மாணவர்களுக்கும் சில கருத்துக்களை வழங்கியும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வழியனுப்பி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.
இது தொடர்பில் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுகையில்,
மிகவும் குறைந்தளவு மக்களை கொண்ட எமது மாவட்டத்தில் விளையாட்டுக்களில் அர்ப்பணிப்புடனும் செயல்திறனுடனும் பங்குகொள்ளும் இளைய சமூகத்தை எண்ணும் போது பெருமையாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் இது முன்னேறிச்செல்லவேண்டும். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து உங்களை பலப்படுத்த நாம் என்றும் இருப்போம். துணிந்து முன்னேறுங்கள்.
அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான இப்போட்டிகளிலும் வெற்றிகள் பல குவித்து தாய் மண்ணுக்கு பெருமையை தேடித்தர எல்லாம் வல்ல இறையாற்றலை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment