June 15, 2014

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது - இந்தியன் எக்ஸ்பிரஸ்


இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இந்தியாவின் த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.  

இலங்கைக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்காக 12 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் இணைப்பாளராக, போர்க்குற்ற விசாரணைகளில் 20 வருட அனுபவத்தை கொண்ட சன்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

இந்த நியமனம் நிறைவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணைகளும் ஆரம்பமாகி இருப்பதாக குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment