யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் படையினர் வேலைவாய்ப்பு வழங்குவதாகக்கூறி வீதிகளால் செல்பவர்களை கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பில்
ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. படையினரின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக வேலைவாய்ப்பு வழங்குவதாக மக்களை ஆசை காட்டியும் அவர்களை கட்டாயப்படுத்தியும் அழைத்து நேர்முகப்பரீட்சை எழுதுவதற்கு வருமாறு முகாம்களிற்கு அழைத்துச்செல்வதாகவும் தெரியவருகின்றது.
முன்னதாக பெரும்பிரச்சாரங்களுடன் தென்மராட்சியின் வறணி பகுதியில் இத்தயைஆட்சேர்ப்பு நடத்தப்பட்ட போதும் பொதுமக்கள் எவருமே எட்டிக்கூடப்பார்த்திருக்கவில்லை.அதையடுத்தே ஆட்களிற்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சேர்ப்பில் படைத்தரப்பு குதித்துள்ளது.
No comments:
Post a Comment