தங்காலையில் கடந்த புதன்கிழமை(4) பஸ் நடத்துனர் மீது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்காலை பிரதான பஸ் தரிப்பிடத்தில்கடந்த புதன்கிழமை(4) 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ் நடத்துனர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது 34 வயதுடைய பிரஹாத் சந்தன கொல்லப்பட்டார்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் தங்கல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை(6) கைது செய்ததுடன் நேற்றிரவு பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment