பாக்குநீரிணை கடற்பகுதியில் கடந்த 24 மணிநேரம் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற் தொழிலாளர்களில் 131 தமிழக கடற்தொழிலாளர்களையும் 26
படகுகளையும் சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இந்திய பிரதமராக மோடி பதவியேற்பு நிகழ்வினை முன்னிட்டு சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை மகிந்தவின் உத்தரவிற்கு அமைவாக விடுதலை செய்தார்கள்.
இன்னிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் தமது தொழில் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
12சிறீலங்கா கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய கடலோர காவல்படையினர் கைதுசெய்ததை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் தலைமன்னார் கடற்பரப்பிலும் கச்சதீவு கடற்பரப்பிலும் வைத்து 131 தமிழக கடற்தொழிலாளர்களை திட்டமிட்டு சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 750 விசைப்படகுகளில் 900-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற சிறீலங்கா கடற் படையினர் 42 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் நாகையைச் சேர்ந்த 32 மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் தலைமன்னார் பகுதியில் ராமாநாதபுரத்தைச் சேர்ந்த 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தமாக 131 மீனவர்களும், 26 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இன்னிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் தமது தொழில் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
12சிறீலங்கா கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய கடலோர காவல்படையினர் கைதுசெய்ததை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் தலைமன்னார் கடற்பரப்பிலும் கச்சதீவு கடற்பரப்பிலும் வைத்து 131 தமிழக கடற்தொழிலாளர்களை திட்டமிட்டு சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற சிறீலங்கா கடற் படையினர் 42 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் நாகையைச் சேர்ந்த 32 மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் தலைமன்னார் பகுதியில் ராமாநாதபுரத்தைச் சேர்ந்த 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தமாக 131 மீனவர்களும், 26 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment