அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு- ஆலையடிவேம்பு பிரதேசங்களில்
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்று வந்த பெண் ஒருவர் உட்பட 9 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்திரளான மின்சார வயர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையக விசேட குழுவினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு- ஆலையடிவேம்பு பிரதேசங்களில் இன்று அதிகாலை 4 மணி முதல் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment