முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாளான நாளை 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பிரான்சில் ‘விடியல்’ எனும் மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஊடக இல்லத்தின் ஒரு புதிய பிறப்பாக வெளிவருகின்ற இந்த விடியல் இதழை, தமிழர்களை இன அழிப்புச் செய்து, தமிழர்களின் போராடும் சக்தியை முற்றாக அழித்துவிட்டதாக சிங்களம் மார்தட்டிக்கொள்ளும் நாளில், தமிழர்களுக்கு நம்பிக்கை தரத்தக்க வகையில் விடியலின் முதல் இதழை நாளை வெளியிட்டு வைக்கவுள்ளதாக ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் நடைமுறை வாழ்க்கையில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்ட, சமூக விடயங்களைத் தாங்கியவாறு வெளிவரவுள்ள இந்த இதழில் தாயக விடயங்களுடன் மற்றும் பல்வேறு விடயங்களும் உள்ளடங்கியிருக்கும் என்றும் ஊடக இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு
Sevranஇல் அமைந்துள்ள தமிழின அழிப்பு சாட்சிய நினைவு கல்லுக்கு முன்பாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஊடக இல்லத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment