May 18, 2014

சுதந்திர தமிழீழம் மலர்வதை யாராலும் தடுத்துவிட முடியாது -வைகோ!



வடசென்னை தண்டையார் பேட்டையில் சிறப்புற ஒழுங்கு படுத்தப்பட்ட இடத்தில் உயிரிழந்த மக்கள்
மாவீரர்களுக்காக அமைக்கபட்ட பொது இடத்தில் பொதுசுடரினை வைகோ உள்ளிட்டவர்கள் ஏற்றிவைத்துள்ளதை தொடர்ந்து பெருமளவான மக்கள் உயிரிழந்த மக்களுக்காக மொழுகுவர்தி ஏத்தி வணக்கம் செலுத்தியுள்ளதை தொடர்ந்து தொடர்ந்து நினைவுரைகளை  இரா.மாசிலாமணி,,கோவை இராமகிருஷ்ணன்,,ஓவீயர் வீரசந்தாணம்,திருமுருகன் காந்தி,வழக்கறிஞர் புரட்சிகவிதாசன்,அர்ஜுன் சம்பத்,வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன்,  விடுதலை வேந்தன், ,கவிஞர் மணிவேந்தன்,கவிஞர் பாரிமைந்தன் , ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்டவர்கள் நினைவுரை நிகழ்தினார்கள் சிறப்புரையினை வைகோ நிகழ்த்தினார்

 ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் இதேநாளில் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டபோது அவர்கள் எழுப்பிய அவலக்குரல் இந்த கடல்அலைகளை தாண்டி நம்முடைய செவிகளை விளவேண்டிய அந்த நேரத்தில் இந்திய நாட்டின் தோ்தல்களத்தின் முடிவுகள் 16ஆம் நாள் வெளியிடப்பட்டு 17ஆம்நாள் கோலாகலமான பட்டாபிசேகங்கள் டெல்லி பட்டணத்தில் அரங்கேறுவதற்கு அயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததையும் இந்த நாளையும் நான் எண்ணிப்பார்கின்றேன். அன்று கொலுமண்டபத்திற்கு சென்றவர்கள் இன்று குப்பைத்தொட்டியில் தூக்கிஎறியப்பட்டுடுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி குப்பைத்தொட்டியில் வீசப்படும் என்று சொன்னேன் அது நடந்திருக்கின்றது
1947 ஆம் ஆண்டிற்கு பிறகு முதலாம் பொதுத்தோ்தலை இந்திய உபகண்டம் சந்தித்தன் பின்னர் இன்றுவரையில் இப்படிப்பட்ட கேவலமான இழிவான அவமான கரமான தோல்வி காங்கிரஸ் சந்தித்தது கிடையாது.

நான் போராட்ட காரன் எனக்கு தோல்வியே கிடையாது..
நீ என்ன யெஜித்துவிட்டாயா நீயும் தோற்றவன் தானே என்று கேட்கலாம் நான் போராட்ட காரன் எனக்கு தோல்வியே கிடையாது நான் தோல்வி என்று எதையும் என்வாழ்வில் கருதியதே கிடையாது தோல்வி என்று கருதுகின்ற போதுதான் முன்னரை விட நூறுமடங்கு வேகத்தில் புறப்படுவேன் எதுநடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டது அடுத்த கட்டத்தை நாங்கள் திட்டமிட்டு நிறைவேற்றுவோம்.நான் அண்ணாவின் பாசறையில் வளர்ந்தவன் நம்முடைய இலக்குகளை அடைவதற்கு எதுசரியான உபாயங்களே அந்த உபாயங்களை கைக்கொள்வோம்
சோனியாகாந்தி இயக்கிய கைப்பாவை ஆக்கி நடத்திய அந்த சர்காரில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈழத்திழர்களை அழிப்பதற்கு பத்தாண்டு காலத்தில் முப்படை தளபாடங்களையும் படைஉதவிகளையும் தடைசெய்த குண்டுகளை வழங்கி முழுமையான இனப்படுகொலை களுக்கும் காரணம் அரசு காங்கிரஸ் தலைமைதாங்கிய ஜக்கியமுற்போக்கு கூட்டணி அரசுதான் அதனை ஏவியது சோனியா காந்திதான்
இத்தாலியின் முசோலினிற்கு ஏற்பட்ட கதி இந்த பெண்மணிக்கு ஏற்பட்டு விடகூடாது என்று நான் கவலைப்படுகின்றேன்.
சோனியா காந்தி இயக்கிய அந்த அதிகார அரசு துடைத்தெறிந்து விடப்பட்டு விட்டது இனி எழமுடியாது இந்தியஉபகண்டத்தில் காங்கிரசை காணவே முடியாது முடிந்துவிட்டது நாங்கள் வெற்றிபெற்று விட்டோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்களே விடுதலைப்புலிகள் தான் என்ன செய்யபோகின்றாய்...
விடுதலைப்புலிகள் மீண்டு எழுந்து வந்துவிடுவார்கள் அதற்கு திட்டம் நடக்கிறது தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளும்,அமைப்புக்களும் அதற்கு துணைபோகின்றன புலம்பெயர் அமைப்புகள் அதற்கு ஏற்பாடு செய்கின்ற எனவே இத்தனை அமைப்புக்களை தடைசெய்யவேண்டும் உலகம் என்று கொடியவன் றாஜபக்ச அனுப்பிய விபரங்களை ஏற்றுக்கொண்டு இந்திய காங்கிரஸ் அரசு அறிவித்துவிட்டு போயிருக்கின்றது நாங்களே விடுதலைப்புலிகள் தான் என்ன செய்யபோகிறார்கள் என்று பகிரங்கமாக வைகோ அறிவித்துள்ளார்.
போகிற போக்கில் எங்கெல்லாம் கொள்ளிவைக்கலாம் என்று கருதிக்கொண்டு செயற்பாட்ட காங்கிரஸ்அரசிற்கு நிதந்தரமாக கொள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எத்தனை எத்தனை வீரகவியங்கள் ஈழத்தில் நடைபெற்றது ஒன்றும் வீணாக போகாது ஆயுதப்புரட்சி என்பது எங்கள் உரிமை என்று முழக்கமிட்ட நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவில் அதிபரானார் அந்த ஆயுதபுரட்சியைத்தானே எங்கள் தலைவர் நடத்தினார்.நடந்ததது ஈழத்தமிழ் இனப்படுகொலை போர்குற்றம் அல்ல இரண்டிற்கும் வேறுபாடு இருக்கின்றது.இனப்படுகொலை நடத்தியவனை கூண்டில் நிறுத்துவோம் தண்டிப்போம் ஏழரைகோடிா மக்கள் வாழ்ந்து என்னபயன் என்றும் தெரிவித்த அவர்.
தாய் தமிழகத்தில் இருக்ககூடிய இளைய வாலிபர்களும் நங்கைகளும் நீங்கள் முடிவெடுங்கள் நமக்கு என்ன கடமை அந்த கடமையினை செய்வதற்கு சபதம் எடுக்கும் இடம்தான் இந்த மே 17 கட்சிகள் சாதிகள் மதங்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டு செயற்படுங்கள் என்றும் வைகோ தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.
  

No comments:

Post a Comment