May 19, 2014

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம்

அவுஸ்த்ரேலியா சிட்னியில் உள்ள black down மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்
நிறைவேற்றலையும் நினைவு கூறும் முகமாக மிகவும் எழிச்சியுடன் இடம் பெற்றது . முதல் நிகழ்வாக தீபம் ஏற்றியதுடன் தமிழரின் தாயாக தேசிய கொடியினையும் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வானது புலம்பெயர் அமைப்புகளின் ஒன்றான tcc அமைப்பின் ஒருங்கிணைப்பில் மே18ம் நாள் உயிரிழந்த மக்களுக்கான தீபம் ஏற்றி அஞ்சலி வணக்க வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இங்கு தொடர்ந்து உரையாற்றிய இனப்பற்றாளர்கள்:
முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ( collective memory) ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ( holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது.


தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது. துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. யூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. என்பது உண்மையானது.


இது போன்று எமது ஈழ விடுதலைக்காக உயிர் நீர்த உறவுகளின் உயிர் தியாகங்கள் எமது விடிவுக்கான அத்திவாரத்தை இன்று எமக்கு ஜெனிவா மூலம் தந்துள்ள்தது. இலங்கையில் எமது உயிர் நீர்த்த உறவுகளின் நினைவு தினத்தை தடுத்து நிறுத்தினாலும் புலம்பெயர் தேசங்களில் எமது அணைத்து நிகழ்வுகளும் சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டே இருக்கின்றது . இதுவே எமக்கு கிடைக்கின்ற பாரிய வெற்றியாக அமைகின்றது. இன் நிகழ்வின் போது எமது இன உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்சிகள் இடம் பெற்றதுடன் இறுதியாக தேசிய கோடி இறக்கிவைத்து நிகழ்வு நிறைவு பெற்றது.




No comments:

Post a Comment