May 19, 2014

நல்லூர் ஆலய முன்றலில் கூட்டமைப்பினரால் நினைவுகூரப்பட்டது முள்ளிவாய்கால் நினைவேந்தல் நாள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலயமுன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.


இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் , பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தினர்.


இதேவேளை நிகழ்வைத் தடுக்கவென நல்லூரில் குவிக்கப்பட்டிருந்த படையினரும் என்ன நடக்கின்றதென்று தெரியாமல்  கோயிலில் நடைபெறும் சமய நிகழ்வு என்றெண்ணி, தாமும் சேர்ந்து அஞ்சலி செய்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment