May 19, 2014

வவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

வவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திலிருந்து வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு நடைபவனியாக சென்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள்- வட மாகாண சுகாதார அமைச்சர்- வட மாகாண சபை உறுப்பினர்கள்- உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்- பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் அங்கு ‘மே 18′ என ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தீபங்களை கூடி நின்று ஏற்றி வைத்தனர்.


இதன் போது ஊடகவியலாளர்களுடன் இணைந்து புலனாய்வாளர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் விபரங்களையும் சேகரித்துக்கொண்டனர். ஆனால் தடுக்க முயற்சிக்கவில்லையென எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.


இந் நிகழ்வைத் தொடர்ந்து சிவசக்தி ஆனந்தனின் அலுவலக முன்றலில் நினைவஞ்சலிக்கூட்டமும் இடம்பெற்றது.

நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்- வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்- வட மாகாணசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி.சிவமோகன்- இ.இந்திரராஜா- எம்.தியாகராஜா- உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான க.பரமேஸ்வரன்- எஸ்.பாபு- ரி.கண்ணன்- எஸ்.தர்மலிங்கம்- கே.முகுந்தன்- எஸ்.பார்த்தீபன்- வவுனியா தெற்கு கல்வி கோட்டக்கல்வி அதிகாரியும் மாகாணசபை வேட்பாளருமான எம்.பி.நடராஜா- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள்- புதிய மாக்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள்- பிரஜைகள் குழுவின் உறுப்பினர்களான எஸ்.தேவராஜா- அருட்சகோதரர் செபமாலை உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment