May 19, 2014

களத்தி;ன் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன்.

களத்தி;ன் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு
உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்….பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே…எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , துவாரகன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கிறது.

கடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடும் கலந்து போனார்கள் தளபதி ஜெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும். அவர்களது குழந்தைகளை குடும்ப உறவுகளை யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள்…மறக்க முடியாத வீரமாக….வீரர்களாக….!
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டது. ஆற்றல் மிக்க தளபதிகள் , போராளிகள் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து கடந்தது….! அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் ஜெயமண்ணா, நளாக்கா இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்

No comments:

Post a Comment