யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினை சூழ சிறிலங்காக படையினரும்
காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்ரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மாணவர்களுகு திடீர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இருந்த போதும் முள்ளிவாய்க்காலை நினைவு தினத்தினை அனைவரும் அனுஸ்ரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து யாழ்.பல்கலைக்கழக வளாகமான பலாலி வீதி, ஆடியபாதம் வீதி, பிறவுண் வீதி ஆகியவற்றில் படையினரும், காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு நிலை கொண்டுள்ள படையினரும் காவல்துறையினரும், அவ்வீதியால் செல்லும் வாகனங்களின் இலக்கங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சோதனை நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமாக சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment