May 18, 2014

முள்ளிவாய்க்கால் முடியாமல் தொடரும் தமிழரின் அவலம்!! பதிவு இணையத்திற்காக இளையவன்னியன்

முள்ளிவாய்க்கால் இந்த நூற்றாண்டின் இனப்படுகொலைக்கான சின்னம் , மனித
பேரவலத்தின் அடையாளம். கொல்லப்படுவதற்கு எந்த காரணமும் இன்றி தமிழர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் ஒரு லட்சத்து நாட்பதுனாயிரத்துக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் துரத்தி துரத்தி கொத்து கொத்தாக கொல்லப்பட்டதுக்கு சாட்சியாக நிற்கும் இடம் அது. பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அங்கே மக்கள் கூடியவுடன் அந்த இடத்திற்கு வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டும் , உணவையும் , வைத்திய தேவையையும் மக்களை கொல்லுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தியும் ஸ்ரீலங்கா தனது இனப்படுகொலையை நடாத்தி இருந்தது.

தருமத்தின் வழியில் நின்று பிரித்தானியரிடம் இழந்த தம் தேசத்தை பெறுவதற்காக அந்த மக்கள் எவற்றை எல்லாம் இழக்க முடியுமோ அவற்றை எல்லாம் இழந்தனர். தமது ராஜ்யத்தை  நிழல் அரசாக கட்டி எழுப்பினர் ஆனாலும்  ஆதிக்க சக்திகள் தமது பூகோள புவிசார்  நலன்களுக்காக பயங்கவாத அரசான  சிறிலங்காவுடன் கை கோர்த்துகொண்டன, முள்ளிவாய்க்காலில் அந்த தேசம், நிழல் அரசு வீழ்ச்சியடைந்தது, தோற்க்கடிக்கப்பட்டது. ஈழத்தமிழினம்  கனவில் கூட எதிர்பார்த்திருக்காத இந்நிகழ்வு நிஜத்தில் நடந்தேறிய போது வார்த்தைக்குள் வடித்துவிட முடியாத வலிகளையும் இழப்புக்களையும் அது  ஏற்படுத்தியது. தமிழ் தேச  ஆத்மாவில்  மிகப்பெரும் காயத்தை ஏற்படுத்தியது.

முள்ளிவாய்க்காளுக்கு பின்னும் இதுவரையில்  அந்த காயம்  ஆற்றப்படவில்லை மாறாக அக்காயம் மீண்டும் குத்தி கிழிக்கப்படுகிறது. 2009 க்கு பின்னான ஈழத்தமிழரின் வாழ்வு அப்படித்தான் இருந்து வருகிறது. பயங்கவாத அரசான ஸ்ரீலங்கா மிகவும் திட்டமிட்ட முறையில் காயத்தை காயப்படுத்தும் செயல்களை செய்து வருகிறது. யுத்தத்தில் தமது சொந்தங்களை தொலைத்தவர்கள் இதுவரையில் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அதிலும் அதிகமாக அழுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், 80000 மேற்பட்ட விதவைகள், பல ஆயிரக்கணக்கான விசேட தேவைக்குற்பட்டவர்கள் வாழ்க்கை மறு சீரமைக்கப்படவில்லை. வறுமை அவர்களை முழுமையாக விழுங்கி நிற்கிறது, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள் இராணுவத்தின் பல பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.தினமும் மரணங்கள் கைதுகள் , இராணுவ அச்சுறுத்தல்கள் , நில அபகரிப்பு , திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் , சோதனைகள்  , இராணுவ சுற்றிவளைப்புக்கள் என்று மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள்.

இராணுவ அடக்குமுறை எங்கு அதிகரிக்கிறதோ அங்கே கருத்து சுதந்திரத்துக்கான வெளியும் சுருங்குகிறது, ஈழத்தை  பொருத்தவரையில் ஊடகங்கள் மீதானதும் ஊடகவியலாலர்கல் மீதானதுமான தாக்குதல்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது, அது  மட்டுமன்றி மக்களுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் , பல்கலைக்கழக மாணவர்கள்  தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் முள்ளிவாய்க்காளுக்கு பின்னும் தமிழ் மக்கள் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கே உள்ளாகி வருகின்றனர் இதனை ஸ்ரீலங்கா அரசு கண்ணுக்கு புலப்படதா வகையில், மிகவும் நுண்ணிய வடிவில் செய்து வருகிறது. தமிழ் மக்களின் மீதான இன அழிப்பு செயல்பாடு என்பது ஸ்ரீலங்காவின் பிரதான நிகழ்ச்சி நிரலுக்கு உற்பட்ட ஒன்று , அதனை தொடர்வதற்கு மிக அண்மையில்  அரங்கேற்றிய நாடகம் தான் புலிகளின் மீள் இணைவு தொடர்பானது. 

இவ்வாறு இனப்படுகொலை அரசின் வேகம் அதிகமாக இருக்க அதனை தடுப்பதற்கான தமிழர்களின் எதிர் வினை என்பது மிகவும் மந்த கதியிலேயே இருக்கிறது. முள்ளிவாய்க்காளுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் வகித்து வந்த தமிழர்களுக்கான தலைமைத்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மாறி இருந்தது , தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட அந்த கட்சி இற்றை வரையிலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் திட்டமிட்ட முறையில் செயற்படுவாதாக தெரியவில்லை. அண்மையிலேயே இந்தியா அரசியலமைப்பு போன்ற (அரை குறை சமஷ்டி ) ஒன்றை தாம் எதிர் பார்ப்பதாக சொல்லி இருந்தது.

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கான சர்வதேச அரசியல் களத்தை திறந்து விட்டிருக்கிறது , அதே கணம் தாயகம் தமிழகம் புலம் என்பற்றை இணைத்து செயல் படகூடிய சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது , ஆனால் இவற்றை உரிய முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்த தவறி இருக்கிறது. மாறிவரும் பூகோள புவிசார் அரசியல் ஈழத்தமிழர்களை அரசியல் பலவான்களாக மாற்றி இருக்கிறது , பேரம் பேசும் சக்தியை அதிகரித்து இருக்கிறது.

இந்து சமுத்திரம் இன்றைய உலகின் ஆதிக்க போட்டிக்கான களமாக மாறி இருக்கிறது, அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனாவின் எழுச்சி இந்து சமுத்திரத்தை நொதிக்கும் பிரதேசமாக மாற்றி இருக்கிறது. இந்த இந்து சமுத்திரத்தின் முத்தாகிய இலங்கையில் 2009 ம் ஆண்டு ஸ்ரீலங்கா தனது நட்பு நாடுகளான அமெரிக்க , சீனா, இந்தியா, பாகிஸ்தான் , என பல நாடுகளின் துணை கொண்டு முள்ளிவாய்க்களில் கொடூர யுத்தத்தை நிகழ்த்தியது. முள்ளிவாய்க்காளுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சீனாவை காதலிக்க தொடங்கியது சீனாவுக்கும் முத்துமாலை திட்டத்தில் ஸ்ரீலங்கா முக்கிய இடம் வகிப்பதால் காதலை வலுப்படுத்தி கொள்கிறது. இந்த காதல் அமெரிக்கா என்னும் சிறிலங்காவின் நண்பனுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது அதனால் நண்பர்களாக இருக்கும் போது இளைத்த குற்றத்தை வைத்து எப்படியாவது  சீன - ஸ்ரீலங்கா காதலை முறித்து சிறிலங்காவை தன் பக்கம் இழுத்துவிட எண்ணுகிறது, இதன் வெளிப்பாடுதான் ஜெனீவா பிரசவிக்கும் தீர்மானங்கள். அதே நேரம் இலங்கையின்  செயல்பாடுகள் இந்தியாவை திருப்பதி படுத்துவதகவும் இல்லை . இதானால் தமிழர்களின் சர்வதேச அரசியலுடனான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது, இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முப்பெரும் தளங்களான தாயகம் தமிழகம் புலத்தை ஒருங்கிணைத்து, தம்மை ஸ்திரப்படுத்தி  கொள்ளுவதோடு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்பதற்கான பொது வேலைத்திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் , காத்திருப்பு அரசியலை , ஜெனீவாவுக்குள்  மட்டுப்படுத்தப்பட்ட அரசியலை கை விட்டு , தம்மை பலப்படுத்தும் அரசியலை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் புவிசார் அரசியல் எதிர்காலத்தில் எப்படியும் மாறி போகலாம் அதனை இரண்டு விதமாக பார்க்கலாம்.

ஒன்று சாதகமாக அமையலாம் அதவாது ஸ்ரீலங்கா சீனா காதல் இன்னும் வலுவடைந்து அது திருமணத்தில் முடிந்து பிள்ளைகள் பெற்றுகொல்லுமாக இருந்தால் அமெரிக்கா மனித உரிமை மட்டுமல்ல தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாகவும் தீர்மானம் கொண்டு வரும் அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியான நன்மைகளை விளைவிக்கும். 

இரண்டாவது பாதகமாக அமையலாம் ஸ்ரீலங்கா சீனா காதல் முறிவடைந்து போகலாம் அல்லது சிறிலங்காவில் அமெரிக்கா சார்பு ஆட்சி ஏற்படலாம் அல்லது சிறிலங்காவும் சீனாவும் குழந்தைகள் பெற்ற பின்னும் விவாகரத்து பெற்று பிரியலாம். இப்படி நிகழ்ந்தால் காத்திருப்பு அரசியலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக அமையும். 

முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விடாத தமிழகளின் அவலங்களை நீக்க ஜந்து வருடங்களில் ஆக்கபூர்வமான எதனையும் செய்யாத தமிழர்களின் அரசியல் தலைமை இனியாவது எதையாவது செய்ய வேணும் என்பதே தமிழர்களின் விருப்பாகும்.


இளையவன்னியன்

No comments:

Post a Comment