May 21, 2014

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

பெல்ஜியம் நாட்டில் தமிழின அழிப்பு நாள் மிக  எழுச்சிப்பூர்வமாக நடைபெற்றது . மாவீரர் கல்லறை வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில்
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் , எமது தேசத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் வணக்கம் செலுத்தப்பட்டு தமிழின அழிப்புக்கான நீதி கோரும் பேரணி Antwerpen தலைமை தொடரூந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தது .

மக்கள் நடமாடும் நகர மத்தியால் பேரணி செல்லும் நேரத்தில் வேற்றின மக்கள் மிக அவதானமாக ஈழத்தமிழர்களின் இன அழிப்பை எடுத்துரைக்கும் பதாகைகளை நோக்கியதோடு அவர்களுக்காக வழங்கிய துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டனர் .

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சிப்பூர்வமாக தமிழினவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உறவுகளுக்காக உணர்வுப்பூர்வமாக தமது நீதியை கோரி நின்று போராடினர்.
 

No comments:

Post a Comment