May 21, 2014

யாழில் வயோதிப பெண் படுகொலை!

யாழில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது கழுத்தில் துணியால் சுற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று பகல்வேளை அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுந்தரம் இராசம்மா (வயது 65) என்பவரே கொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த பெண்ணின் மகள் வெளியே சென்றிருந்த சமயம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் திருடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது. சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment