போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத் துயராய், மாறா ரணமாய் நிறைந்து நிற்கும் நாளில், தன் மொழியை, தமிழ்மொழியை, தமிழினத்தை, தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் இன்னுயிர்களை, நாம் தொட்டு உறவாடிய தமிழ் சொந்தபந்தங்களை மனதில் இருத்தி அவர்களை நினைத்து
உறுதியேற்றும் இந்நாளில், அவர்களின் நினைவுகளால் உந்தப்பட்டு அனைவரின் நெஞ்சிலும் அடங்காப் பெரு நெருப்பாய் - கனன்றிடும் சுதந்திர வேட்கையின் தழல் நம்மைச் சூழ்ந்திடும் இந்நாளிலே, தமிழ் தேசிய விடுதலைக் குயிலாய் ஒலித்த தமிழ் தேசிய பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா, பச்சிளம் தளிர் பாலச்சந்திரனின் நினைவுகளோடு, அனைத்து ஈகியர்களையும், மாவீரர்களையும், குழந்தைகளையும் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவில் சுமந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையை சமர்ப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசை வெளியீடு கடந்த 18 ஆம் நாள் சென்னையில் நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாள் இசைப்பிரியாவின் வாழ்கை வரலாற்றினை தாங்கிய இந்த படத்திற்கு இசையினை இசைஞானி இளையாராஜா அமைத்துள்ளார் படத்திற்கான பாடல்களை கவிஞர்களான மேத்தா,நா.முத்துக்குமார்,பழநி பாரதி ஆகியோர் எழுதியுள்ளார்கள்.
ஊடகவியலாள் இசைப்பிரியாவின் வாழ்கை வரலாற்றினை தாங்கிய இந்த படத்திற்கு இசையினை இசைஞானி இளையாராஜா அமைத்துள்ளார் படத்திற்கான பாடல்களை கவிஞர்களான மேத்தா,நா.முத்துக்குமார்,பழநி பாரதி ஆகியோர் எழுதியுள்ளார்கள்.
கு.கணேசன் எழுதி இயக்கிய இந்த படத்தின் இசைவெளியீடு கடந்த 18 ஆம் நாள் சென்னையில் பிரசாந் லாப்பில் வெளியிடப்பட்டுள்ளது படத்திற்கான பாடல்களை இசைஞானி இளையராஜா வெளியிட நடிகர்களான விவேக்,நந்தா,இயக்குனர் பேரரசு உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment