யுத்தத்தில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளுக்குமான விசேட அஞ்சலி நிகழ்வு இன்று பிற்பகல் மன்னாரில் அவர்களை அடக்கம் செய்த அதே இடத்தில் இடம்பெற்றது.
மன்னார் பொது சேமக்காலை மற்றும் முத்தரிப்புத்துறை தேவாலயம் ஆகிய இடங்களில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் திரு அந்தோணி மார்க், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இவ் அஞ்சலி நிகழ்வுகள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment