May 19, 2014

இந்த நாள் தான் எங்களின் அந்த வாழ்கையை தொலைத்த நாள் - அனந்தி சசிதரன்!

2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு சரணடைந்து காணாமற்போன உறவுகள் அனைத்தும்  மீண்டும் வரவேண்டும். இந்த நாள் தான் எங்களின் அந்த வாழ்கையை தொலைத்த
நாள் என்றார் அனந்தி சசிதரன். இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு, ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு சரணடைந்து காணாமற்போன உறவுகள் அனைத்தும்  மீண்டும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டு சிதறுண்டு அதில் மரணித்தோமோ அதேபோல அதற்கு காரணமானவர்களும் அவ்வாறு சிதறி போகவேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகவே இந்த கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டோம்' என்றார். 

இந்த நாள் தான் எங்களின் அந்த வாழ்கையை தொலைத்த நாள். அன்றைய தினம் சுமார் 8 மணியளவில் என்னுடைய கணவரை பிள்ளைகளுடன் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் நான் கையளித்திருந்தேன். 

ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் என்னுடைய கணவர் எங்கே இருக்கின்றார் என்று கூட தெரியாமல் அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்ற நிலைமையில் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றேன். முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழிபாட்டில் ஈடுபட்டேன். அடுத்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தேன். இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்தேன்.  

இந்த நாடு இறைமை உள்ள நாடு, ஜனநாயகம் நிலவுகின்ற நாடு என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டு இருக்கின்ற அதேவேளை இங்கே கண்ணீருடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன' எனக் கூறினார் அனந்தி சசிதரன்

No comments:

Post a Comment