May 22, 2014

கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம்!

கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு  மிசிசாக நகரத்தில் வசிக்கும்
அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25,  ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம்,  ஈசா பரா என்று அழைக்கப்படும் ஈசானந்தா இருவரும் தலைமை தாங்கி இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.


ஈசா பரா என்பவர் கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் வீடு வாங்கி விற்று புழைப்பு நடத்துபவர். காஞ்சனா துரைசிங்கம் இலங்கை தமிழ், சிங்கள மக்களுக்கு சேவை செய்யும் ஒரு முன்னை நாள் சமூக சேவகி. அவர் சமூக சேவை என்ற பெயரில் அரசாங்கத்திடம் பணம் பெற்று தனது சொந்த செலவுக்கு சுருட்டிக் கொண்டதால் அவர் சமூக சேவகி என்ற வேலையில் இருந்து தூக்கப்பட்டார்.

இவர்கள் இந்த நிகழ்வை எடுத்து நடத்துவது தப்பல்ல. ஆனால் அதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் தமிழர்களாக இருந்து. தமிழ் மக்களை வைத்து தங்கள் அன்றாட புளைப்பை நடத்தி கொண்டு இருக்கும் இவர்கள் முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த அத்தனை உயிர்களையும் என் கொடுத்தோம் என்று ஒன்றுமே விளங்காதவர்கள் போலும், அதை கொச்சை படுத்தும் வகையிலும் நாங்கள் இங்கே கனடா நாட்டில் சிங்களவரும், தமிழர்களும் ஒன்றாக ஒற்றுமையாக வாழுவதாகவும், ஒரே கூழ் பானையில் கூழ் காச்சி ஒன்றாய் உக்காந்து குடிப்பது போலவும் கனடா நாட்டவருக்கு காட்டுவதற்கு ஒழுங்கு செய்திருப்பது தான் கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தை உசுப்பி விட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன. ???

No comments:

Post a Comment