May 19, 2014

வேலை தருவதாகக கூறி அழைத்து செற்ற 30 பெண்கள் இராணுவத்தில் இணைப்பு

யாழில் சிறிலங்கா இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைக்கும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
.

வேலை வாய்ப்பு மற்றும் உதவித்திட்டங்கள் என்று பொய் கூறி அழைத்து வரப்பட்ட 35 தமிழ் பெண்கள் இன்று திங்கட்கிழமை இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை யாழ்.பொது நூலகத்திற்கு அருகில்  வெஷாக் நிகழ்வு திடலில் வைத்தே இராணுவத்திற்கு தமிழ் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து இராணுவத்தினால் வேலைவாய்ப்பு என்ற பெயரில் அழைத்து வரப்பட்ட 100 தமிழ் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு என்று கூறி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் இருந்து சுமார் 35 தமிழ் யுவதிகள் கட்டாயத்தின் பேரில் சிறிலங்கா இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். . 


No comments:

Post a Comment