தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார் என்று அரசு கூறும் நபரான கோபி எனப்படும் கஜீபன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டிருக்கிறார் என்று யாழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அதனை அரசஅதிகாரிகளிடம் இருந்து நேற்றிரவு திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லையெனவும் அது தெரிவித்துள்ளது.
கோபியைத்தேடி வன்னியில் பெரும் தேடுதல் வேட்டைகளைப்படையினர் நடத்தியதாகவும் இந்நிலையில் நேற்று கோபி எனப்படும் கஜீபன் என்கிற நபர் கைது செய்யப்பட்டார் என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்தக் கைது தொடர்பான உத்தியோபூர்வ நிலைப்பாட்டை அறிய இலங்கைப்பொலிஸ் பேச்சாளருடன் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவர்; பதிலளிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பை மீள ஒழுங்கமைக்கின்றார் என்ற குடச்சாட்டின் அடிப்படையிலேயே கோபி தேடப்பட்டு வந்தார். உண்மையில் அவ்வாறு எந்த செயற்பாடும் தற்போது இல்லைஎன்றும் சிங்கள அரசின் திட்டமிட்ட பரப்புரையே இதுவெனவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழர் மீதான வன்முறைக்கு சிங்களவர்களுக்கு தேவைப்படுவது புலிகளின் பெயர் . இதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சிங்கள படையினர் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment