வன்னியில் படையினர் குவிக்கப்பட்டு கடுமையான சோதனை இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சந்திகள் தோறும் படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணலாற்று காட்டுப்பகுதியில் மூன்று நபர்கள் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராம புறங்களான நெடுங்கேணி,ஒட்டிசுட்டான்,மாங்குளம் தண்டுவான்,முள்ளியவளை ,முல்லைத்தீவு,குமுழமுனை,செம்மலை, நாயாறு ,கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் சந்திக்கு சந்தி படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த இந்த சம்பவத்தின் பின்னர் இரவில் மக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளார்கள் எந்தநேரத்தில் எவர் கைதுசெய்யப்படாலம் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாக அங்கி்ருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment