சென்னையில் ஏஞ்சல் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளை ரெளடிகளைப் போன்று
இழிவு படுத்தியதை கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது.
இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனர் சாது சுந்தர் செல்வராசு, வில்லிவாக்கம் உதவி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். த.எ.இ. தோழர்கள் இன உணர்ச்சியோடு முழக்கமிட்டனர். பிறகு போராளிகளின் தியாகத்தை இழிவுப்படுத்தியமைக்கு மன்னிப்புக் கேட்டார்.
இதில் த.எ.இ. மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலர் தனசேகர், மதியரசு மற்றும் தாசு, வின்னரசு, ரானே ஆகிய பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment