April 12, 2014

கொடிகாமத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதியில் எலும்புக்கூடு மீட்பு!!

யாழ். கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் எலும்புக்கூடொன்று
புதன்கிழமை (09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டஇப்பிரதேசத்திலுள்ள குறித்த தோட்டக் காணியை தோட்டச் செய்கைக்காக பண்படுத்தும்போது, இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பில் கிராம அலுவலருக்கு குறித்த காணி உரிமையாளர் தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிஸாருக்கு குறித்த கிராம அலுவலகர் தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினார்.
குறித்த இடத்திற்குச் சென்ற கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment