பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கைது செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், அண்மைய வாரங்களாக அதிகளவான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட கோபி என்பவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோபி மற்றும் அவரது சகாக்கள் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
எனினும், இவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யபபட்டவர்கள் பூசா உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சாதாரண கைதிகளுக்கு நிகரான வகையில் நடத்தப்பட வேண்டுமென பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்: பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
கைது செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் பதின்ம வயது சிறுமிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்.
அல்லது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அல்லது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பெண் கைதிகள் தடுத்து வைத்தல் தொடர்பில் பேணப்பட வேண்டிய நியதிகளை பேண நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26 வயதான சாமிளா கஜீதீபன், 62 வயதான செல்வநாயகி ராசமலர், 52 வயதான புவனேஸ்வரி குலசிங்கம், ஜெயக்குமாரி பாலேந்திரன், 28 வயதான நிதர்சனா, 22 வயதான ரவீந்திரன் வதணி லோகநாதன், 61 வயதான யோகராணி, 16 வயதான சசிதரன் யதுர்சனி மற்றும் 42 வயதான சசிதரன் தவமலர் ஆகியோர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கைதிகளின் மனித உரிமைகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment