தமிழர் சமூக பொது ஆயம்: ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆவணம் ஏப்ரல் 13, 2014
கனடாவிலுள்ள 80க்கும் அதிகமான தமிழர் சமூக அமைப்புகள், கூட்டு
நிலைப்பாட்டுக்கும் கொள்கைகளை நெறிப்படுத்தவுமென ஒருமனப்பட்ட தீர்மான ஆவணத்தைத் தயாரிப்பதற்கு ஒன்றுகூடின. தமிழர் சமூக பொது ஆயத்தின் கூட்டம் 2014 ஏப்ரல் 13ம் திகதி ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் மண்டபத்தில் நடைபெற்றது. கனடிய மத்திய, மாகாண, மாநகர ஆட்சியினருடன் தொடர்புடைய பிரதான விடயங்களும், சமூகத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடும் இங்கு ஆராயப்பட்டது.
தொடர்ந்து தீவிரமாகத் தொடர்பாடல் மேற்கொள்ளவும் அக்கறையுள்ள குழுமத்துடன் இணைந்து செயற்படவும் கனடியத் தமிழர் சமூகத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு தொடர்பாக முடிவு இங்கு எடுக்கப்பட்டது.
கனடாவின் சகல மட்ட அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்குபற்றி, தமிழர் சமூகத்திற்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
மேற்படி பொது ஆயம் கடந்த ஐந்து மாதங்களாக இது தொடர்பான விரிவான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. தமிழரின் சமூக, பண்பாட்டு, அரசியல் சார்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுவான அடிப்படையில் தயாரித்த ஆவணம் ஏப்ரல் 13ம் திகதிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு 34 தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன. சர்வதேச சமூகத்தினதும், கனடிய அரசாங்கத்தினதும் பொறுப்புகளை விளக்கும் வரலாற்று ஆவணம் இது.
தொடர்ந்து கனடியத் தமிழர் சமூக முன்னேற்றம் கருதி மற்றைய அமைப்புகளுடன் இணைந்து பொது ஆயம் செயற்படும்.
50க்கும் அதிகமான சமூகத்தின் அடிமட்ட கிராம மற்றும் பாடசாலை அமைப்புகளுடன், மேலதிகமாக பின்வரும் அமைப்புகள் பொது ஆயத்தில் பங்கு கொண்டன
50க்கும் அதிகமான சமூகத்தின் அடிமட்ட கிராம மற்றும் பாடசாலை அமைப்புகளுடன், மேலதிகமாக பின்வரும் அமைப்புகள் பொது ஆயத்தில் பங்கு கொண்டன
Aarivakam Association
Albert Campbell High School Tamil Students Association
Brampton Tamil Association
Brock University Tamil Students Association
Canadian Tamil Academy
Canadian Tamil Remembrance Organization
Canadian Tamil Sports Association
Canadian Tamil Womens Development Organization
Canadian Tamil Youth Alliance
Carleton University Tamil Students Association
Centre for Canadian Tamils
Dalhousie Tamil Students Association
Tamil Cultural Association of Winnipeg
Markham District High School Tamil Students Association
Markham Tamil Organization
McMaster University Tamil Students Association
Mississauga Tamil Association
National Council of Canadian Tamils
Pearson High School Tamil Students Association
Pope John Paul High School Tamil Students Association
Quebec Tamil Association
Ryerson University Tamil Students Association
Tamil Association of Nova Scotia
Tamil Canadian Graduates Association
Tamil Catholic Community -Montreal
Tamil Information Centre
Tamil Youth Organization – Canada
University of Toronto Scarborough Campus Tamil Students Association
University of Toronto St.George Tamil Students Association
UOIT-Durham College Tamil Students Association
Wilfred Laurier University Tamil Students Association
York University Tamil Sudents Association
Albert Campbell High School Tamil Students Association
Brampton Tamil Association
Brock University Tamil Students Association
Canadian Tamil Academy
Canadian Tamil Remembrance Organization
Canadian Tamil Sports Association
Canadian Tamil Womens Development Organization
Canadian Tamil Youth Alliance
Carleton University Tamil Students Association
Centre for Canadian Tamils
Dalhousie Tamil Students Association
Tamil Cultural Association of Winnipeg
Markham District High School Tamil Students Association
Markham Tamil Organization
McMaster University Tamil Students Association
Mississauga Tamil Association
National Council of Canadian Tamils
Pearson High School Tamil Students Association
Pope John Paul High School Tamil Students Association
Quebec Tamil Association
Ryerson University Tamil Students Association
Tamil Association of Nova Scotia
Tamil Canadian Graduates Association
Tamil Catholic Community -Montreal
Tamil Information Centre
Tamil Youth Organization – Canada
University of Toronto Scarborough Campus Tamil Students Association
University of Toronto St.George Tamil Students Association
UOIT-Durham College Tamil Students Association
Wilfred Laurier University Tamil Students Association
York University Tamil Sudents Association
தமிழ் குமுகாயத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு:
6.1. புவியியல் ரீதியாகவும் அகழ்வாராய்ச்சியாலும் வரையறுக்கப்பட்ட தாயகம், தனித்துவமான மொழி, பண்பாடு, கூட்டு வாழ்க்கை கொண்ட ஓர் இனம் என்வற்றால், ஈழத்தமிழர்கள் ஈழத்தின் ஆதிகாலக் குடிகள் என்பது வரலாற்றுச் சான்றுகளால் அறியப்பட்ட உண்மையாகும்.
6.2. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களிடம் தமிழர்கள் முறையே 1505ம் 1656ம் 1818ம் ஆண்டுகளில் தற்காலிகமாக இழந்த இறையாண்மையை 1948இல் ஐரோப்பிய காலனித்துவம் முடிவுற்ற வேளையிலும் மீளப் பெறமுடியாமல் போய்விட்டது.
6..3. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து முதல் முப்பது வருடங்கள் சிங்கள தேசியத்திடமிருந்து தமது சுதந்திரத்தைப் பெறுவதற்கு தமிழர்கள் சனநாயக வழியில் போராடினார்கள். இந்த வழிமுறை தோல்வியடைந்ததையடுத்து 1976இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைச் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வடகிழக்கு தமிழ் மக்கள் இப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கினார்கள்.
6.4. சனநாயக, சமாதான வழியிலான சாத்வீகப் போராட்டம் (1948-1983வரை) தோல்வியடைய, அடுத்த முப்பது வருடங்கள் சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழர்கள் அங்கீகரிக்கப்படாத அரசியல் இறையாண்மையைப் (னநகயஉவழ ளவயவந) பெற்றனர். இந்த இறையாண்மையானது 2002இல் சர்வதேச அனுசரணையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அங்கீகாரம் பெற்றது.
6.5. 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் இந்த அரசியல் இறையாண்மையை அங்கீகரித்து, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.
6.6. தமிழ் மக்களின் அரசியல் இறையாண்மைக்கெதிராக சிங்கள அரசினால் நடத்தப்பட்ட சமநிலையற்ற போரானது இனவழிப்பில் முடிந்ததோடு, ஐ.நா குழுவின் அறிக்கையும், நோர்வேயின் சமாதான கணிப்பறிக்கையும் இந்த இனவழிப்பை மறைமுகமாக ஏற்றுக் கொண்டனவாயினும், 'இனப்படுகொலை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
6.7. இலங்கை அரசாங்கமானது யுத்தத்திற்குப் பிந்தியகால சுமூக சூழ்நிலை நிலவுகின்றதென்ற மாயையினூடாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பை விரைவாக்கி, தற்பொழுதும் தீவிரமாகவும் வெளிப்படையாகவும், துரிதமாகவும் ஒரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது.
6.8. இராணுவ ஆட்சியின்கீழ் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் பெண்களும் சிறுவர்களுமே. ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம் கிடைத்த செய்திகளின்படி, தமிழ்ப் பெண்கள் பரந்த அளவில் பாலியல் வல்லுறவுக்குட்படுதல் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலின் அங்கமே.
6.9. தற்பொழுது நிலவும் நடவடிக்கைகளை நோக்கும்போது, பரந்துபட்ட இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றம், ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரங்களின் அழிப்பு என்பன ஈழத்தமிழர்களின் அடையாளத்தையும், ஒன்றிணைந்த தமிழர் தாயகத்தினையும் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்றன என்பவற்றை உணர்ந்து சர்வதேசமானது தமிழ்த்தேசியத்தின் கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
6.10. இலங்கை அரசியற் சாசனத்தின் 6ம் திருத்தச் சட்டம், தமிழர் பிரதிநிதிகள் தங்கள் நாட்டின் உள்ளேயிருந்தவாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்துரைப்பதற்குத் தடையாக உள்ளது.
6.11. ஈழத்தமிழர் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வும், அவர்களின் தனித்துவமான இனமென்ற அங்கீகாரமும், நடைமுறையிலுள்ள இலங்கையின் அரசியற் சாசனத்தின் கீழ் நிறைவேற்றப்பட முடியாது.
6.12. ஈழத்தமிழருக்குக் கிடைக்கும் நியாயமான தீர்வு இசுலாமிய மக்களையும் ஏனைய மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
6.13. ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கையின்படி ஐ.நாவின் செயலாளர் நாயகம், ஐநா அமைப்பானது இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதில் தோல்வி கண்டுள்ளதென்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
6.14. பன்னாட்டு சமூகம், ஈழத்தமிழரின் தேசியத்தையும், அவர்களின் மரபு ரீதியான தாயகத்தையும் ஆங்கீகரிக்க வேண்டும்.
6.15. இதற்கு முன்னோடியாக, இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழர் தாயகத்தில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களும் களையப்பட வேண்டும்.
6.16. ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருப்பதன் மூலம் ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதுடன், இலங்கை இராணுவம் தமிழர் நிலங்களை அபகரிப்பதற்கு தடையாக இருக்கும்.
6.15. இதற்கு முன்னோடியாக, இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழர் தாயகத்தில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களும் களையப்பட வேண்டும்.
6.16. ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருப்பதன் மூலம் ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதுடன், இலங்கை இராணுவம் தமிழர் நிலங்களை அபகரிப்பதற்கு தடையாக இருக்கும்.
6.17. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் அடிப்படைக் குறைபாடுகளைக் கொண்டதோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குரிய தீர்வாக அமைய மாட்டாது. எனவே இனவழிப்பு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் 2010ம் 2013ம் முடிவுகளின்படி ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை செய்யவேண்டும்.
6.18. பன்னாட்டுச் சமூகம் ஈழத்தமிழரின் அரசியல் ரீதியான பிரச்சனையைப் புறந்தள்ளி, மனிதவுரிமை மீறல்களை மட்டும் ஆராய்வதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே கொண்டு வரலாம்; ஆனால் தொடரும் இனப்படுகொலையை ஆராய்வதன் மூலம் மட்டுமே நிரந்தரமான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யலாம்.
அண்மையில் யேர்மனி–பிரேமன் நகரில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ஆழமான, விரிவான முக்கியமான சாட்சியத்தின் அடிப்படையில் இனப்படுகொலைக் குற்றத்தை இலங்கை அரசு புரிந்துள்ளது என்பதைப் பின்வரும் காரணிகளைக் கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அண்மையில் யேர்மனி–பிரேமன் நகரில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ஆழமான, விரிவான முக்கியமான சாட்சியத்தின் அடிப்படையில் இனப்படுகொலைக் குற்றத்தை இலங்கை அரசு புரிந்துள்ளது என்பதைப் பின்வரும் காரணிகளைக் கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளது.
(அ) ஒரு குழுமத்தைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொலை செய்வது, கூட்டமாக மக்களைப் படுகொலை புரிவது, அளவிடமுடியாத வகையில் பாரிய ஆயுதங்களை மக்கள் மேல் பயன்படுத்துவது, பாதுகாப்பு வலயம் எனச் சொல்லிக்கொண்டு மக்களைக் கூட்டமாக அழைத்து வந்து அவர்களைப் படுகொலை செய்வது, சிறிலங்கா நடத்தும் இனப்படுகொலையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் தமிழ் மக்களின் சமூகத் தலைவர்களை கொலை செய்வதும்,
(ஆ) சித்திரவதை செய்வது, மனிதபிமானமற்ற முறையிலும் இழிவு தரும் வகையிலும் மக்களை நடத்துவது, பாலியல் வன்முறையையும், பாலியில் வல்லுறவையும் ஆயுதமாகப் பயன்படுத்துவது, கொடுமைப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வது, கொலை செய்வதாக பயமுறுத்துவது, உடலுக்குக் கேடு வரும்வகையிலும் காயங்களைத் தோற்றுவிப்பதும், உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதகம் வரும்வகையில் ஒர் இனமக்களை நடத்துவதும்,
(இ) வேண்டுமென்று ஓர் இன மக்களின் வாழ்க்கையில் முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிப்பை ஏற்படுத்துவதும், அவர்கள் வாழ்விடங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் விரும்பத்துக்கு எதிராக வெளியேற்றுவதும், அவர்கள் காணிகளை அபகரிப்பதும், உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் காணிகளை சுவிகரிப்பதும் இனப்படுகொலையில் அடங்குகின்றது.
மக்கள் தீர்ப்பாயம் மேலும் சில சாட்சியங்களை கருத்தில் கொண்டது.
(ஈ) ஓர் இன மக்களின் பிறப்பு வீதத்தைக் குறைக்கும் வகையில் கருத்தடைகளை பயன்படுத்தும்படி மக்களை அச்சமூட்டிப் பாவிக்க வைப்பதும், மலடாக்கும் வகையில் யுக்திகளை கையாள்வதும் இனப்படுகொலையின் அம்சமாக இருப்பதால், இவைகளும் இடம் பெற்றனவா என்று மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
6.19. பன்னாட்டு ஆதரவுடன் ஓர் இடைக்கால நிர்வாகம் நிறுவப்படுதலே தொடரும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான ஒரே வழி.
6.20. ஒன்றுபட்ட அரசியல் அமைப்பின் கீழ், இலங்கையின் தலைவர், மாகாண முதல்வரூடாக, ஏற்கனவே பகிரப்பட்ட அதிகாரங்களை எந்நேரமும் இரத்து செய்யலாம் என்பதால், மாகாண சபைகள் ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக ஒருபோதும் அமைய மாட்டாது. கடந்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ் மக்கள் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை மீளுறுதி செய்வதற்கும், எமது விடுதலைக்காக போராடியோரை நினைவுகூரும் உரிமைக்காகவுமே வாக்களித்தனர்.
6.21. தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொது வாக்கெடுப்பொன்றை வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் ஏதிலிகளாகவுள்ள தமிழ் மக்களுக்கிடையே நடத்துவதற்குச் சர்வதேசம் தீர்மானிக்க வேண்டும்.
6.22. பொது வாக்கெடுப்பு மூலமாகவே பல நாடுகள் தங்கள் அரசியல் வேணவாவை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை யாப்பின் 6 ம் திருத்தச் சட்டம் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்குத் தடையாக உள்ளது. ஆகையால், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் ஏதிலிகளாகவுள்ள தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்குப் பொதுவாக்கெடுப்பே சரியான வழியாகின்றது.
6.23. ஈழத்தமிழரின் இனப்படுகொலைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு வெளியேயுள்ள பல அமைப்புகளும், அரசாங்கங்களும் பங்காளிகளாக இயங்குகின்றனர். இவர்கள் இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த கடப்பாடுடையவர்களும், மற்றும் ஈழத்தமிழரின் உரிமையை நிலைநாட்டும் பொறுப்பும் உள்ளவர்கள்.
புலம்பெயர்ந்த தமிழ் குமுகாயத்தின் கடப்பாடு:
6.24. இலங்கையில் வாழும் தமிழர்கள் 6ம் திருத்தச் சட்டத்தின் கீழ் தமது அரசியல் வேணவாவை சுதந்திரமாக பிரதிபலிக்க முடியாமையினால், புலத்தில் வாழும் தமிழ் குமுகாயம் அவர்களின் குரலாக இயங்க வேண்டும்.
6.25. இனப்படுகொலையை எதிர்நோக்கியவண்ணம் எம்மண்ணில் வாழும் மக்களுக்கு பலவேறு அமைப்புகளூடாக உதவிகள் செய்ய வேண்டும்.
கனடிய அரசாங்கம் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைத்தல் என்கின்ற விடயத்தில் எடுக்கும் முயற்சியை வரவேற்கின்ற அதே நேரத்தில், கனடிய அரசாங்கத்திடமிருந்து தமிழ் சமூகம் எதனை எதிர்பார்க்கின்றது?
6.26. இலங்கை அரசாங்கத்தின் நம்பகமற்ற உள்ளக விசாரணைப் பொறிமுறையானது தொடர்ச்சியான முறையில் தமிழ் மக்களுக்குப் புரியப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்காது என்பதை, கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6.27. இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக சுயாதீனமான பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு கனடிய அரசாங்கமானது அயராது குரல் கொடுக்க வேண்டும்.
6.28. இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்குப் பயணத் தடையையும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டுவர வேண்டும்.
6.29. ஈழத்தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றை ஆங்கீகரிக்கும் அரசியற் தீர்வொன்றே நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டும்.
6.30. ஈழத்தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையையும் சர்வதேச கண்காணிப்பில் எமது அரசியல் வேணவாவை அறிய ஒரு வாக்கெடுப்பையும் ஆதரிக்க வேண்டும்.
6.31. 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர் தொடர்ந்தும் அடக்குமுறையை எதிர் நோக்குவதனால், அவர்களின் அரசியற்தஞ்சக் கோரிக்கையில் இவ்விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நகர, மாகாண ஆட்சிகளிடமிருந்து தமிழ் குமுகாயம் எதனை எதிர்பார்க்கின்றது?
6.32. தமிழ் சமூகத்துடனான புரிந்துணர்வூடாக அவர்களின் கலாச்சார, பொருளாதார தேவைகளை ஊக்குவித்து மேம்படுத்துதல்.
தமிழ் குமுகாயத்தின் செயற்தன்மையை தடைசெய்வதினால் வரும் பின்விளைவுகள்:
தமிழ் குமுகாயத்தின் செயற்தன்மையை தடைசெய்வதினால் வரும் பின்விளைவுகள்:
6.33 இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும், 424 தனியாட்களையும் தடை செய்ததை தமிழர் சமூகம் நிராகரிக்கின்றது. இந்த அமைப்புகள் பட்டியலில் கனடியத் தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, கனடியத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவையும் அடங்கும். தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்காக புலம்பெயர் மக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இந்தத் தடை நேர்மையான உண்மை, பொறுப்புக்கூறல், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கை அரசுக்குள்ள அக்கறையற்ற தன்மையை வெளிப்படையாக்குகின்றது.
6.34 ஈழத்தமிழர்களின் நீதியான அரசியல் தீர்வுக்குரிய பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொள்ளும் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் நோக்குடன் இத்தடை கொண்டு வரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது முன்னர் கொண்டு வரப்பட்ட தடையைத் தொடர்ந்து, கனடியத் தமிழர்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் செயற்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது போன்ற பாதையில் இத்தடையும் கொண்டுவரப்பட்டது. கனடியத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வதை மறுப்பதற்கும், தடுப்பதற்கும், அடக்குவதற்கும், அச்சமூட்டுவதற்குமாகவே பயங்கரவாதம் என்ற பதத்தை இது தொடர்ந்து பயன்படுத்துகிறது. மேலும், தமிழர் தேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச மட்டத்தில் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச சமூக ஆதரவைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
No comments:
Post a Comment