April 16, 2014

தமிழர் சமூகம் கனடாவில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொது ஆயத்தில் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்தனர்

ஏப்ரல் 14, 2014 அன்று ரொரன்ரோவில் நடைபெற்ற பொது ஆயத்தில் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த 80 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு தமது ஏகோபித்த அபிலாசைகளை பிரதிபலிக்கும் முகமான வழிநடத்தும் கொள்கைகளை கொண்ட பொது ஆவணத்தை தயாரித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கான தொடர்பாடலின் அடிப்படையை உருவாக்கினர்.



தமிழ் குமுகாயத்தின் பொது ஆயம் எடுத்த தீர்மானமானது கனடிய அரசின் மூன்று மட்ட அரசினதும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருத்தமானதாக அமைந்தது. இந்த பொது ஆயத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து மட்ட அரசியல் பிரதிநிதிகளின் வருகையில் இருந்து தமிழ் குமுகாயத்திற்கென வழங்கப்பட்ட அவர்களின் ஆதரவை அவதானிக்க முடிந்தது.



தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி கலந்து கொண்ட இந்த பொது ஆயத்தினூடாக கனடா வாழ் தமிழ் சமூகம் ஒரே குரலில் வலுவான பிரேரணையை முன்வைத்ததோடு கனடா வாழ் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் மட்டங்களுக்கும் நல்லெண்ண ஆர்வலர்களுக்கும் தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு தொடர்பு கொள்ள ஒரு பொது தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அனைத்து அமைப்புக்களும் பொது ஆயத்தின் தீர்மானத்தை உறுதியோடு அதற்குரிய இடத்திற்கு எடுத்து செல்வதற்கு திட சங்கற்பம் எடுத்துக் கொண்டுள்ளனர்.



கனடியத் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதிலும் தொடர்ந்தும் பங்கேற்ற அனைத்து அமைப்புகளுடனான தொடர்புகளை ஏற்படுத்துதலிலும் ஆர்வலர்கள் அக்கறையாளர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ந்து அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதிலும் பொது ஆயத்தை ஒழுங்குபடுத்தி நடாத்திய ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து பொறுப்பேற்று செயற்படுவார்கள் என்பதையும் அறியத் தருகின்றோம்.



மேலதிக தகவல்களுக்கு:
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
தொலைபேசி: 416-830-7703



No comments:

Post a Comment