விட்டுக்கொடுக்க முடியாது. வெளிப்படைத் தன்மை இல்லை. பகிர்ந்து வாழ தயாரில்லை. விரும்பியதைத்தான் செய்வோம். விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன
மற்றவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக்கொள்ளாவிட்டால் எந்த வகையிலாவது ஏற்றுக்கொள்ளச் செய்வோம். இது, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய ஒரு மதிப்பீடு.
இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவரே இல்லை என்பது அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு. புதிய நிலைப்பாடு என்னும்பொது, வெல்ல முடியாததாகக் கருதப்பட்ட விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அவர்களை அழித்தொழித்ததன் பின்னர் அரசாங்கம் வரித்துக் கொண்டுள்ள நிலைப்பாடு இதுதான். இந்த நாட்டில் இலங்கையர்களே இருக்கின்றார்கள். அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், அதற்கு ஆதரவாகச் செயற்படுபவர்கள் பெரும்பான்மை மக்கள். அரசுக்கு எதிராகச் செயற்டுபவர்களே சிறுபான்மையினர் என்பதே அரசாங்கத்தின் அரசியல் தத்துவமாகும்.
இந்த வகையில் பார்த்தால் இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கென்று எந்தவிதமான அரசியல் பிரச்சினைகளும் கிடையாது. எல்லோரும் எங்கும் போய்வரலாம். எங்கும் வாழலாம். எல்லோருக்கும் அந்த ஜனநாயக உரிமை நிலைநிறத்தப்பட்டிருக்கின்ற து. எவரும் இந்த நாட்டில் எந்தப் பிரதேசத்தையும் பாரம்பரியமான பிரதேசம் என்றோ, தாயகப் பிரதேசம் என்றோ உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் இணைந்த தாயகப் பிரதேசம் என்று குறிப்பிட முடியாது. உரிமை கோரவும் முடியாது.
முப்பது வருடங்களாக நிலவிய மோசமான யுத்த நிலைமையின்போது இங்கு பயங்கரவாதமே கோலோச்சியது. பயங்கரவாதத்தைப் படையினர் பெரும் உயிர்த்தியாகங்களைச் செய்து அழித்துள்ளார்கள். அதன் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை பெற்று கொடுத்திருக்கின்றார்கள். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் படையினருக்கு நன்றியும் விசுவாசமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வலியுறுத்தியும் வருகின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த அரசாங்கம் வகுத்துள்ள இந்தப் புதிய கொள்கைவழியிலான போக்குகள் தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. மோசமான யுத்தச் சூழலைக் கடந்து வந்துள்ள அவர்கள், இனிமேலாவது அமைதி கிடைக்கும். அச்சுறுத்தல்கள், ஆபத்துக்களின்றி நிம்மதியாக வாழலாம். அதற்கான வழிகளை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் கானல் நீராகிப் போயிருப்பதே இன்றைய அரசியல் யாதார்த்தமாக இருக்கின்றது.
தமிழ் மக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்
தங்களுக்குப் புரியாத, விருப்பமில்லாத வழிகளில் அரசாங்கம் போய்க்கொண்டிருப்பதாக உணர்கின்ற தமிழ் மக்கள், தங்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி, நிம்மதியான ஒரு வாழ்வை நோக்கி, நிரந்தரமான ஓர் அமைதியை நோக்கி அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழி நடத்திச் செல்லும் என்று நம்பியிருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை காரணமாக பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தொடர்ச்சியாக ஆதரித்து அதன் பின்னால் அணிசேர்ந்திருக்கின்றார்கள் .
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எந்த அளவிற்கு நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கி;ன்றது. கடும்போக்கு கொண்ட அரசாங்கத்துடன் முட்டி மோதியும், விட்டுக் கொடுத்தும், சில வேளைகளில் விலகியிருந்தும், சில வேளைகளில் ஒத்துழைத்தும் செல்ல வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.
அரசியல் ரீதியாக, தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள அமைப்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருக்கின்ற போதிலும், அரசாங்கம் அதற்குரிய அரசியல் அந்தஸ்தையும், அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் அளித்திருக்கின்றதா என்றால், இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், பிரதேச செயலக மட்டத்திலான அடிமட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் தீர்மானங்கள், செயற்பாடுகள் தொடக்கம் மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான கூட்டங்கள், தீர்மானங்கள், செயற்பாடுகள், மாகாண மட்டத்திலான இத்தகைய செயற்பாடுகள் ஈறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கமும், அமைச்சர்கள், அதிகாரிகள் என பொறுப்பு வாய்ந்த பலரும் அலட்சியம் செய்தே வருகின்றார்கள். இதனை நாளாந்தம் நடைமுறை வாழ்க்கையில் காணக் கூடியதாக இருக்கின்றது.
எனவே, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரசியல் பொறுப்புக்களை, அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற அளவில் நிறைவாக முன்னெடுத்துச் செல்ல முடியாத இக்கட்டான ஓர் அரசியல் தளத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கின்றது. இத்தகைய அரசியல் தளத்தை, தமிழ் மக்களுக்கு சாதகமானதாக மாற்றி அமைக்கக் கூடிய அரசியல் வாய்ப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கவில்லை அல்லது அமையவில்லை என்பதையும் மறுக்க முடியாது.
கூட்டமைப்பு என்ன செய்கிறது?
ஆட்சியில் உள்ள அரசாங்கமும் சரி, ஆளும் கட்சியும் சரி, எதிரணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும் நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான பங்காளிகளாகக் கருதியே செயற்பட வேண்டும். எதிரணியில் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், எதிரிகள் அல்ல. அரசுக்கு முன்னால் எதிரில் இருந்து செயற்படுகின்ற பங்காளிகளே அவர்கள். அவர்களையும் இணைத்து, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று ஆட்சி நடத்த வேண்டியதே நல்லதோர் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், இங்கு இலங்கையில், எதிரணியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், அதன் மக்கள் பிரதிநிதிகளையும், இந்த நாட்டின் ஆட்சியில், அரசியல் செயற்பாடுகளில் கைகோர்த்து செல்ல வேண்டிய அரசியல் பங்காளிகளாக அரசாங்கம் கருதுவதாக இல்லை. அவர்களை, தொலைவில் ஒதுக்கி வைத்து, அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய எதிரிகளாகக் கருதி செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கின்றது. நாட்டிற்குப் பொதுவான நன்மை பயக்கத்தக்க விடயங்கள் அல்லது முகிகியமாகத் தேவைப்படுகின்ற விடயங்களில் கூட, அரசாங்கமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்படுகின்ற போக்கினைக் காண முடியாத நிலைமையே நிலளூவுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய விடுதலைப்ளூபுலிகள், பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள். அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதன் பின்னர், இறைமையுள்ள ஓர் அரசு என்ற வகையில் மோசமான யுத்தச் சூழலில் சிக்கி, பல்வேறு இழப்புகளுடனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருக்கின்ற தமிழ் மக்களை இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் கௌரவமாகவும், சரிசமமாகவும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. மாறாக அவர்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒடுக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒடுக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளே நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கின் றன. உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை அரசு முன்னெடுத்திருந்தாலும்கூட, அவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் பயனளிக்கத்தக்க வகையில் மேற்கொள்ளப்படாத நிலைமையையே காணக்கூடியதாக இருக்கின்றது.
விடுதலைப்புலிகளூளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றனவே தவிர, யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய சுமுக நிலைமை அங்கு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே கூறியிருக்கின்றார்.
‘தற்போது வடகிழக்குப் பிரதேசங்களில், அந்தப் பிரதேசத்;தின் தோற்றத்தை, இனரீதியாக, கலாசார ரீதியாக மொழி ரீதியாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான சம்பவங்களே அங்கு இடம்பெற்று வருகின்றன. (இதுபற்றியெல்லாம் நாங்கள் தென்னாபிரிக்க விஜயத்தின்போது அங்கு பேசவுள்ளோம்)’ என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
அவருடைய கருத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரனும் பிரதிபலித்திருக்கின்றார்.
‘யுத்தத்தின் பின்னர் இன்றைக்குள்ள சூழ்நிலையானது அன்றைய நிலைமையிலும் பார்க்க மிகவும் மோசமாகியிருக்கின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களக் குடியேற்றங்களும் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றன. இந்தப் போக்கானது இன்னும் ஓர் ஐந்து வருடங்களில் இப்போதுள்ள வாழ்க்கை முறையும், இனப்பரம்பலும் பெரிய அளவில் மாறக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன’ என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
இப்படியாக நிலைமைகள் மோசமடைந்து சென்று கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது, எப்படி இருக்கின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுந்திருக்கின்றது. இது குறித்து தமிழ் மக்களும் பெரிய அளவில் சிந்திக்கத் தலைப்பட்டு;ள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் அல்லது தமிழ்ப் பிரதேசங்களில் நிலைமைகள் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக மோசமடைந்து செல்கையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுதியாகச் செயற்படவில்லை அல்லது செயற்படுவது போதாது என்றே அவர்கள் கருதுகின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் இன்னுமே சுட்ட மண்ணும் சுடாத மண்ணைப் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உறுதியும், செயற்திறனும் கொண்ட இறுக்கமான அரசியல் தலைமையே இப்போது தமிழ் மக்களுக்கு அவசியமாகியிருக்கின்றது. அந்தத் தேவையை அவர்களின் அரசியல்; தலைவர்கள் உணர்ந்திருந்தாலும்கூட, அவர்களிடையே சரியான கருத்துப் பரிமாற்றங்கள் இல்லை. ஒருமித்த கருத்தும் இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
மூன்றாவது முறையாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தனக்கு எதிரான சர்வதேச பிரேரணையொன்றிற்கு எதிர் கொண்டிருந்தது. இந்தப் பிரேரணையின் மூலம், தனக்கு விருப்பமில்லாத சர்வதேச விசாரணையொன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய மோசமான நிலைமைக்கு அரசு ஆளாகியிருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றை மீட்டுப் பார்ப்பதற்கோ அல்லது அவற்றுக்குப் பொறுப்பு கூறுவதற்கோ அரசாங்கம் தயாராக இல்லை. அத்தகைய நடவடிக்கைள் என்பது வேப்பங்காயாக அதற்கு கசக்கின்றது. இதனால், அரசாங்கம் அடிபட்ட வேங்கையாக அரசு இப்போது சீற்றமடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மோசமான எதிரியாகக் கருதி காரியங்களை முன்னெடுத்திருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ஓர் அரசியல் இலக்கை நோக்கி, காரியங்களை முன்னெடுக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால், அதற்கு கூட்டமைப்பு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாத நிலைமையையே காணக் கூடியதாக இருக்கின்றது. இது கவலைக்குரிய விடயம். மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகவும் இருக்கின்றது.
சர்வதேச மட்டத்திலான செயற்பாடுகள்
இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்களானாலும்சரி, இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வை நோக்கிய தென்னாபிரிக்காவின் பங்களிப்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற முயற்சியானாலும்சரி, இலங்கை தொடர்பான சர்வதேச விவகாரங்களின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எத்தகைய தயார்ப்படுத்தலுடன் காரியங்களை எதிர் கொள்கின்றது என்பது சிந்தனைக்குரிய விடயமாக உள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்
கூட்டத் தொடருக்கு சில தினங்கள் இருக்கின்ற நிலையிலேயே அதுபற்றி ஆராய்வதற்காக முடிவுகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக த் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது. கூட்டமைப்பின் அதிரடி நடவடிக்கையாக ஊடகம் ஒன்றினால் வர்ணிக்கப்பட்டிருந்த அந்தக் குழு கடைசி வரையிலும் நியமிக்கப்படவே இல்லை. ஜெனிவாவுக்கு யார் யாரெல்லாம் செல்வது, என்ன விடயங்கள் பற்றி எவ்வாறு யார் யார் பேசுவது, யார் யாரோடு எப்படிப் பேசுவது என்பது பற்றியெல்லாம் முன் ஆயத்தமற்ற நிலையிலேயே காரியங்கள் நடைபெற்றிருந்தன.
வடமாகாண சபையின் சார்பில் ஜெனிவாவுக்கு அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை அனுப்பி வைப்பது என்ற தீர்மானத்திற்கமைவாக அவர் அங்கு சென்றிருந்தார். ஆனால், குறிப்பிட்ட சந்திப்பொன்றில் தனக்கு சந்ர்ப்பம் வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானே அங்கு கருத்துக்களை வெளியிட்டார் என்றும், தான் அங்கு ஒரு வேடிக்கை பார்ப்பவராகவே கலந்து கொண்டதாக அனந்தி சசிதரன் பகிரங்கமாகவே பின்னர் கூறியிருந்தார். அவருடைய கூற்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவில், அந்த சந்தர்ப்பத்தி;ல் அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்பவர்கள் தொடர்பிலான விபரங்கள் ஏற்கனவே ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததனால், சுரேஸ் பிரேமச்சந்திரனை உள்ளடக்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதியல்லாத, இலங்கையில் இருந்து சென்றிருந்த சட்டத்தரணி ஒருவர் கலந்து கொண்டிருந்தது பற்றியும் அதிருப்தி தெரிவிக்கபபட்டிருந்தது.
உரிய முன் ஆயத்தங்கள் இல்லாதபோது இத்தகைய சங்கடமான நிலைமைகள் எற்படவே செய்யும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது மக்களின் தலைவர்களாக, பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு அழகுமல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் இத்தகைய செயற்பாடுகள் நல்லதல்ல.
கடந்த 2012 ஆம் ஆண்டளவில் தென்னாபிரிக்காவுக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னெடு;த்திருந்த முயற்சியின் பயனாக, தென்னாபிரிக்கா தனது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கைப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரினால் இலங்கையை மையப்படுத்தி எற்பட்டிருந்த அரசியல் அமளிகள் காரணமாக இந்த முயற்சியின் தொடர் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஜெனிவா மாநாட்டு நேரத்தில் அந்த முயற்சியை மேற்கொள்வது, இலங்கையைப் பாதுகாப்பதாக அமையும் என்ற காரணத்தினால் அங்கு மேற்கொள்ளவிருந்த கூட்டமைப்பு தூதுக்குழுவின் விஜயம் பின்போடப்பட்டிருந்தது. அவ்வாறு பின்போடப்பட்டிருந்த அந்த விஜயத்தை ஏப்ரல் மாத முற்பகுதியில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தவைர் சம்பந்தனின் தலைமையில் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்திற்கும்கூட, முன் ஆயத்தங்கள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. தென்னாபிரிக்காவுக்குச் செல்பவர்கள் யார் யார் என்பது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களுக்கே சரிவர அறிவிக்கப்பட்டிருந்தாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் தென்னாபிரிக்க விஜயத்தில் இடம்பெற்றிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு செல்லவில்லை. ஆனாலும், ஜெனிவா விஜயத்திற்கான குழுவில் இடம்பெற்றிருந்தது போன்று இந்தக் குழுவிலும் சட்டத்தரணி ஒருவர் இடம்பெற்றிருந்ததாகவும், கூட்டமைப்பு பிரதிதிநிதிகள் தென்னாபிரிக்காவைச் சென்றடைந்தபோது, அங்கு இடம்பெற்ற எல்லா சந்திப்புக்களிலும் பங்கேற்றிருந்தாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளராக இல்லாத போதிலும், தமிழரல்லாத இவர், கூட்டமைப்பின் ஆலோசகராக சந்திப்புக்களின்போது அறிமுகப்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் அரசியல் தீரவு காண்பதற்கான ஒரு முக்கியமான சர்வதேச பபணத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவாகச் யார் யார் செல்கின்றார்கள், என்ன விடயங்கள் பற்றி பேசப்போகின்றார்கள் என்ற கருத்துப் பரிமாற்றம் – முன் ஆயத்தம் இடம்பெற்றிருக்க வேண்டும். வழமைபோலவே, கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயங்களில் கலந்து கொள்பவர்கள் யார் என்பதுபற்றி இறுதி நேரம் வரையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்ல ை. அது மட்டுமல்ல தென்னாபிரிக்க விஜயத்தில் சந்திப்புக்களில் ஆலோசகராகக் கலந்து கொண்டவர் பற்றிய விடயமும் விபரமும் வெளிய்படவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னரும், பயங்கரவாதத்துடன் இணைத்து வைத்து தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்ற இன்றைய சூழலில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதிரிகளாக இருந்து முயற்சிகளை மேற்கொள்வது பொருத்தமானதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், இத்தகைய முயற்சிகளில் மக்கள் கூட்டமைப்பின் கரங்களை, மக்கள் பலப்படுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கைள் ஒருபோதும் பெரிய அளவில் உதவப்போவதில்லை. மாறாக மக்கள் மனங்களில் பல்வேறு சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கவே உதவும். இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கவனத்திலும், கருத்திலும் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இறுக்கமான ஓர் அமைப்பாக மாற்றி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இது இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
- செல்வரட்ணம் சிறிதரன்
மற்றவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக்கொள்ளாவிட்டால் எந்த வகையிலாவது ஏற்றுக்கொள்ளச் செய்வோம். இது, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய ஒரு மதிப்பீடு.
இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவரே இல்லை என்பது அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு. புதிய நிலைப்பாடு என்னும்பொது, வெல்ல முடியாததாகக் கருதப்பட்ட விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அவர்களை அழித்தொழித்ததன் பின்னர் அரசாங்கம் வரித்துக் கொண்டுள்ள நிலைப்பாடு இதுதான். இந்த நாட்டில் இலங்கையர்களே இருக்கின்றார்கள். அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், அதற்கு ஆதரவாகச் செயற்படுபவர்கள் பெரும்பான்மை மக்கள். அரசுக்கு எதிராகச் செயற்டுபவர்களே சிறுபான்மையினர் என்பதே அரசாங்கத்தின் அரசியல் தத்துவமாகும்.
இந்த வகையில் பார்த்தால் இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கென்று எந்தவிதமான அரசியல் பிரச்சினைகளும் கிடையாது. எல்லோரும் எங்கும் போய்வரலாம். எங்கும் வாழலாம். எல்லோருக்கும் அந்த ஜனநாயக உரிமை நிலைநிறத்தப்பட்டிருக்கின்ற
முப்பது வருடங்களாக நிலவிய மோசமான யுத்த நிலைமையின்போது இங்கு பயங்கரவாதமே கோலோச்சியது. பயங்கரவாதத்தைப் படையினர் பெரும் உயிர்த்தியாகங்களைச் செய்து அழித்துள்ளார்கள். அதன் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை பெற்று கொடுத்திருக்கின்றார்கள். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் படையினருக்கு நன்றியும் விசுவாசமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வலியுறுத்தியும் வருகின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த அரசாங்கம் வகுத்துள்ள இந்தப் புதிய கொள்கைவழியிலான போக்குகள் தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. மோசமான யுத்தச் சூழலைக் கடந்து வந்துள்ள அவர்கள், இனிமேலாவது அமைதி கிடைக்கும். அச்சுறுத்தல்கள், ஆபத்துக்களின்றி நிம்மதியாக வாழலாம். அதற்கான வழிகளை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் கானல் நீராகிப் போயிருப்பதே இன்றைய அரசியல் யாதார்த்தமாக இருக்கின்றது.
தமிழ் மக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்
தங்களுக்குப் புரியாத, விருப்பமில்லாத வழிகளில் அரசாங்கம் போய்க்கொண்டிருப்பதாக உணர்கின்ற தமிழ் மக்கள், தங்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி, நிம்மதியான ஒரு வாழ்வை நோக்கி, நிரந்தரமான ஓர் அமைதியை நோக்கி அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழி நடத்திச் செல்லும் என்று நம்பியிருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை காரணமாக பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தொடர்ச்சியாக ஆதரித்து அதன் பின்னால் அணிசேர்ந்திருக்கின்றார்கள்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எந்த அளவிற்கு நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கி;ன்றது. கடும்போக்கு கொண்ட அரசாங்கத்துடன் முட்டி மோதியும், விட்டுக் கொடுத்தும், சில வேளைகளில் விலகியிருந்தும், சில வேளைகளில் ஒத்துழைத்தும் செல்ல வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.
அரசியல் ரீதியாக, தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள அமைப்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருக்கின்ற போதிலும், அரசாங்கம் அதற்குரிய அரசியல் அந்தஸ்தையும், அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் அளித்திருக்கின்றதா என்றால், இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், பிரதேச செயலக மட்டத்திலான அடிமட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் தீர்மானங்கள், செயற்பாடுகள் தொடக்கம் மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான கூட்டங்கள், தீர்மானங்கள், செயற்பாடுகள், மாகாண மட்டத்திலான இத்தகைய செயற்பாடுகள் ஈறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கமும், அமைச்சர்கள், அதிகாரிகள் என பொறுப்பு வாய்ந்த பலரும் அலட்சியம் செய்தே வருகின்றார்கள். இதனை நாளாந்தம் நடைமுறை வாழ்க்கையில் காணக் கூடியதாக இருக்கின்றது.
எனவே, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரசியல் பொறுப்புக்களை, அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற அளவில் நிறைவாக முன்னெடுத்துச் செல்ல முடியாத இக்கட்டான ஓர் அரசியல் தளத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கின்றது. இத்தகைய அரசியல் தளத்தை, தமிழ் மக்களுக்கு சாதகமானதாக மாற்றி அமைக்கக் கூடிய அரசியல் வாய்ப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கவில்லை அல்லது அமையவில்லை என்பதையும் மறுக்க முடியாது.
கூட்டமைப்பு என்ன செய்கிறது?
ஆட்சியில் உள்ள அரசாங்கமும் சரி, ஆளும் கட்சியும் சரி, எதிரணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும் நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான பங்காளிகளாகக் கருதியே செயற்பட வேண்டும். எதிரணியில் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், எதிரிகள் அல்ல. அரசுக்கு முன்னால் எதிரில் இருந்து செயற்படுகின்ற பங்காளிகளே அவர்கள். அவர்களையும் இணைத்து, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று ஆட்சி நடத்த வேண்டியதே நல்லதோர் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், இங்கு இலங்கையில், எதிரணியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், அதன் மக்கள் பிரதிநிதிகளையும், இந்த நாட்டின் ஆட்சியில், அரசியல் செயற்பாடுகளில் கைகோர்த்து செல்ல வேண்டிய அரசியல் பங்காளிகளாக அரசாங்கம் கருதுவதாக இல்லை. அவர்களை, தொலைவில் ஒதுக்கி வைத்து, அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய எதிரிகளாகக் கருதி செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கின்றது. நாட்டிற்குப் பொதுவான நன்மை பயக்கத்தக்க விடயங்கள் அல்லது முகிகியமாகத் தேவைப்படுகின்ற விடயங்களில் கூட, அரசாங்கமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்படுகின்ற போக்கினைக் காண முடியாத நிலைமையே நிலளூவுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய விடுதலைப்ளூபுலிகள், பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள். அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதன் பின்னர், இறைமையுள்ள ஓர் அரசு என்ற வகையில் மோசமான யுத்தச் சூழலில் சிக்கி, பல்வேறு இழப்புகளுடனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருக்கின்ற தமிழ் மக்களை இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் கௌரவமாகவும், சரிசமமாகவும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. மாறாக அவர்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒடுக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒடுக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளே நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்
விடுதலைப்புலிகளூளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றனவே தவிர, யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய சுமுக நிலைமை அங்கு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே கூறியிருக்கின்றார்.
‘தற்போது வடகிழக்குப் பிரதேசங்களில், அந்தப் பிரதேசத்;தின் தோற்றத்தை, இனரீதியாக, கலாசார ரீதியாக மொழி ரீதியாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான சம்பவங்களே அங்கு இடம்பெற்று வருகின்றன. (இதுபற்றியெல்லாம் நாங்கள் தென்னாபிரிக்க விஜயத்தின்போது அங்கு பேசவுள்ளோம்)’ என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
அவருடைய கருத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரனும் பிரதிபலித்திருக்கின்றார்.
‘யுத்தத்தின் பின்னர் இன்றைக்குள்ள சூழ்நிலையானது அன்றைய நிலைமையிலும் பார்க்க மிகவும் மோசமாகியிருக்கின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களக் குடியேற்றங்களும் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றன. இந்தப் போக்கானது இன்னும் ஓர் ஐந்து வருடங்களில் இப்போதுள்ள வாழ்க்கை முறையும், இனப்பரம்பலும் பெரிய அளவில் மாறக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன’ என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
இப்படியாக நிலைமைகள் மோசமடைந்து சென்று கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது, எப்படி இருக்கின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுந்திருக்கின்றது. இது குறித்து தமிழ் மக்களும் பெரிய அளவில் சிந்திக்கத் தலைப்பட்டு;ள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் அல்லது தமிழ்ப் பிரதேசங்களில் நிலைமைகள் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக மோசமடைந்து செல்கையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுதியாகச் செயற்படவில்லை அல்லது செயற்படுவது போதாது என்றே அவர்கள் கருதுகின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் இன்னுமே சுட்ட மண்ணும் சுடாத மண்ணைப் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உறுதியும், செயற்திறனும் கொண்ட இறுக்கமான அரசியல் தலைமையே இப்போது தமிழ் மக்களுக்கு அவசியமாகியிருக்கின்றது. அந்தத் தேவையை அவர்களின் அரசியல்; தலைவர்கள் உணர்ந்திருந்தாலும்கூட, அவர்களிடையே சரியான கருத்துப் பரிமாற்றங்கள் இல்லை. ஒருமித்த கருத்தும் இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
மூன்றாவது முறையாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தனக்கு எதிரான சர்வதேச பிரேரணையொன்றிற்கு எதிர் கொண்டிருந்தது. இந்தப் பிரேரணையின் மூலம், தனக்கு விருப்பமில்லாத சர்வதேச விசாரணையொன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய மோசமான நிலைமைக்கு அரசு ஆளாகியிருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றை மீட்டுப் பார்ப்பதற்கோ அல்லது அவற்றுக்குப் பொறுப்பு கூறுவதற்கோ அரசாங்கம் தயாராக இல்லை. அத்தகைய நடவடிக்கைள் என்பது வேப்பங்காயாக அதற்கு கசக்கின்றது. இதனால், அரசாங்கம் அடிபட்ட வேங்கையாக அரசு இப்போது சீற்றமடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மோசமான எதிரியாகக் கருதி காரியங்களை முன்னெடுத்திருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ஓர் அரசியல் இலக்கை நோக்கி, காரியங்களை முன்னெடுக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால், அதற்கு கூட்டமைப்பு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாத நிலைமையையே காணக் கூடியதாக இருக்கின்றது. இது கவலைக்குரிய விடயம். மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகவும் இருக்கின்றது.
சர்வதேச மட்டத்திலான செயற்பாடுகள்
இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்களானாலும்சரி, இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வை நோக்கிய தென்னாபிரிக்காவின் பங்களிப்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற முயற்சியானாலும்சரி, இலங்கை தொடர்பான சர்வதேச விவகாரங்களின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எத்தகைய தயார்ப்படுத்தலுடன் காரியங்களை எதிர் கொள்கின்றது என்பது சிந்தனைக்குரிய விடயமாக உள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்
கூட்டத் தொடருக்கு சில தினங்கள் இருக்கின்ற நிலையிலேயே அதுபற்றி ஆராய்வதற்காக முடிவுகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையின் சார்பில் ஜெனிவாவுக்கு அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை அனுப்பி வைப்பது என்ற தீர்மானத்திற்கமைவாக அவர் அங்கு சென்றிருந்தார். ஆனால், குறிப்பிட்ட சந்திப்பொன்றில் தனக்கு சந்ர்ப்பம் வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானே அங்கு கருத்துக்களை வெளியிட்டார் என்றும், தான் அங்கு ஒரு வேடிக்கை பார்ப்பவராகவே கலந்து கொண்டதாக அனந்தி சசிதரன் பகிரங்கமாகவே பின்னர் கூறியிருந்தார். அவருடைய கூற்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவில், அந்த சந்தர்ப்பத்தி;ல் அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்பவர்கள் தொடர்பிலான விபரங்கள் ஏற்கனவே ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததனால், சுரேஸ் பிரேமச்சந்திரனை உள்ளடக்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதியல்லாத, இலங்கையில் இருந்து சென்றிருந்த சட்டத்தரணி ஒருவர் கலந்து கொண்டிருந்தது பற்றியும் அதிருப்தி தெரிவிக்கபபட்டிருந்தது.
உரிய முன் ஆயத்தங்கள் இல்லாதபோது இத்தகைய சங்கடமான நிலைமைகள் எற்படவே செய்யும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது மக்களின் தலைவர்களாக, பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு அழகுமல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் இத்தகைய செயற்பாடுகள் நல்லதல்ல.
கடந்த 2012 ஆம் ஆண்டளவில் தென்னாபிரிக்காவுக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னெடு;த்திருந்த முயற்சியின் பயனாக, தென்னாபிரிக்கா தனது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கைப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரினால் இலங்கையை மையப்படுத்தி எற்பட்டிருந்த அரசியல் அமளிகள் காரணமாக இந்த முயற்சியின் தொடர் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஜெனிவா மாநாட்டு நேரத்தில் அந்த முயற்சியை மேற்கொள்வது, இலங்கையைப் பாதுகாப்பதாக அமையும் என்ற காரணத்தினால் அங்கு மேற்கொள்ளவிருந்த கூட்டமைப்பு தூதுக்குழுவின் விஜயம் பின்போடப்பட்டிருந்தது. அவ்வாறு பின்போடப்பட்டிருந்த அந்த விஜயத்தை ஏப்ரல் மாத முற்பகுதியில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தவைர் சம்பந்தனின் தலைமையில் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்திற்கும்கூட, முன் ஆயத்தங்கள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. தென்னாபிரிக்காவுக்குச் செல்பவர்கள் யார் யார் என்பது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களுக்கே சரிவர அறிவிக்கப்பட்டிருந்தாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் தென்னாபிரிக்க விஜயத்தில் இடம்பெற்றிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு செல்லவில்லை. ஆனாலும், ஜெனிவா விஜயத்திற்கான குழுவில் இடம்பெற்றிருந்தது போன்று இந்தக் குழுவிலும் சட்டத்தரணி ஒருவர் இடம்பெற்றிருந்ததாகவும், கூட்டமைப்பு பிரதிதிநிதிகள் தென்னாபிரிக்காவைச் சென்றடைந்தபோது, அங்கு இடம்பெற்ற எல்லா சந்திப்புக்களிலும் பங்கேற்றிருந்தாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளராக இல்லாத போதிலும், தமிழரல்லாத இவர், கூட்டமைப்பின் ஆலோசகராக சந்திப்புக்களின்போது அறிமுகப்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் அரசியல் தீரவு காண்பதற்கான ஒரு முக்கியமான சர்வதேச பபணத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவாகச் யார் யார் செல்கின்றார்கள், என்ன விடயங்கள் பற்றி பேசப்போகின்றார்கள் என்ற கருத்துப் பரிமாற்றம் – முன் ஆயத்தம் இடம்பெற்றிருக்க வேண்டும். வழமைபோலவே, கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயங்களில் கலந்து கொள்பவர்கள் யார் என்பதுபற்றி இறுதி நேரம் வரையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்ல
யுத்தம் முடிவடைந்த பின்னரும், பயங்கரவாதத்துடன் இணைத்து வைத்து தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்ற இன்றைய சூழலில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதிரிகளாக இருந்து முயற்சிகளை மேற்கொள்வது பொருத்தமானதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், இத்தகைய முயற்சிகளில் மக்கள் கூட்டமைப்பின் கரங்களை, மக்கள் பலப்படுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கைள் ஒருபோதும் பெரிய அளவில் உதவப்போவதில்லை. மாறாக மக்கள் மனங்களில் பல்வேறு சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கவே உதவும். இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கவனத்திலும், கருத்திலும் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இறுக்கமான ஓர் அமைப்பாக மாற்றி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இது இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
- செல்வரட்ணம் சிறிதரன்
No comments:
Post a Comment