இரணைமடு விவசாயச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாயிகள்
முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம்
முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இரணைமடு நீர் கிளிநொச்சி விவசாயத் தேவைக்கே போதாத நிலையில் குடாநாட்டுக் கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்குகொண்டிருந்தனர்.
போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக அங்கு சென்ற பொலிஸார் போராட்டத்தினை முன்னெடுக்க தாம் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் போராட்டத்தினை கைவிடுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர். இதேவேளை அங்கு திரண்டுள்ள பெருமளவான இராணுவத்தினர் பிரதேச சபை வளாகச் சூழலில் நிலை கொண்டிருக்கின்றனர்.இருப்பினும் 9மணிக்கு தமது போராட்டத்தினை தொடங்கிய விவசாயிகள்,இரணைமடு நீர் வழங்கல் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துவருவதுடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினர் யாழ் – கிளிநொச்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான புள்ளிவிபரங்களையும் தரவுகளையும் வெளியிடுவதாக குற்றம் சாட்டி குறித்த சபையின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டனர்;.அத்துடன் இலங்கை அரச வானொலியான தென்றல் வானொலியில் தொடர்ந்தும் கிளிநொச்சி விவசாயிகள் தேசத் துரோகிகள் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுவருகின்ற விளம்பரங்களுக்கும் விவசாயிகள் எதிராக கோசம் எழுப்பினர்.
இந்நிலையினில் போராட்டத்திற்கு ஆதரவளித்து கலந்து கொண்ட கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது உறுதி மொழிகளையடுத்து போராட்டத்தை விவசாயிகள் பிற்பகலுடன் விலக்கி கொண்டனர்.

No comments:
Post a Comment