இலங்கை போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் மற்றும்
பொதுமக்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செஞ்சோலை சிறார் இல்லம்
கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் செயல்பட்டது. அந்த இல்லத்தின் மீதும் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. போருக்கு பின்பு கேபி என்ற செல்வராசா பத்மநாதன் நடத்தி வரும் நெர்டோ நிறுவனத்தின் சார்பில் கிளிநொச்சியில் ஆண் சிறுவர்களுக்கான செஞ்சோலை சிறுவர் இல்லம் கடந்த 16-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பேராசிரியர் கந்தையா தேவராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேள், கனடா இராஜதுரை தம்பதியினர், யாழ். நதியா ஜீவலர்ஸ் உரிமையாளர் என்.சத்யரூபன், யாழ். ஹரிகணன் அச்சக உரிமையாளர் எஸ்.ராஜ்குமார்,
ஒட்டுசுட்டான் புரமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கிறேசன் பெர்ணான்டோ, இந்திக யாகண்டவெல, யாழ். சர்வீஸ் நிலைய உரிமையாளர் ரி.புஸ்பகரன், யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த எஸ்.ஞானலோஜினி, யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த போட்டோ சிறீ உரிமையாளர் எஸ்.மீரா, லண்டன் கதிரவேலு கோமலேஸ்வரன், யாழ்ப்பாணம் தயாபரன்,
சர்வமத பெரியோர்களான கிளிநொச்சி மாவட்ட அருட்தந்தை எம்.கான்ஸ்போவர், கிளிநொச்சி சிவத்தமிழ் வித்தகர் அமுத லக்ஸ்மிகாந்த குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு முத்தையன்கட்டு அன்பு இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களின் காவடி, நடன நிகழ்வுகளுடன் நாதஸ்வர மேளவாத்தியம் முழங்க விருந்தினர்கள் “செஞ்சோலை சிறுவர் இல்லம் (ஆண்கள்)” கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை விறுவிறுப்பு இணையத்தள தலைமை செய்தி ஆசிரியர் ரிசி தொகுத்து வழங்கினார். உணவு கூடத்தை கந்தையா தேவராஜா, இந்திக யாகண்டவெல திறந்து வைத்தனர். புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்பு கனடா ஈழநாடு பத்திரிகை மூலமாக கனடாவாழ் தமிழ் மக்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும், களஞ்சிய அறையையும் சரத் சந்திரன் திறந்து வைத்தார்.
ஆனந்தவேல்(வல்வெட்டித்துறை) ஞாபகார்த்தமாக சிவகுமார் நிதியுதவியில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் முதலாவது கட்டடத்தொகுதியை கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் .முருகவேல் திறந்து வைத்தார். லண்டனைச் சேர்ந்த சிவகாந்தன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் இரண்டாவது கட்டடத் தொகுதியை யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த வழங்கறிஞர் எஸ்.ஞானலோஜினி திறந்துவைத்தார்.
கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தம்பு வல்லிபுரம் சோதிடர் ஞாபகார்த்தமாக யாழ். சர்வீஸ் நிலைய உரிமையாளர் .புஸ்பகரன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியை .புஸ்பகரன் திறந்து வைத்தார்.
அச்சுவேலி வடக்கு அமரர்களான தங்கவேலாயுதம்-சரஸ்வதி ஞாபகார்த்தமாக கனடாவைச் சேர்ந்த இராஜதுரை-தெய்வீகராணி நிதியுதவியுடன் கட்டப்பட்ட அலுவலகத்திற்கான கட்டடத்தொகுதியை இராஜதுரை-தெய்வீகராணி திறந்து வைத்தனர்.
முள்ளிவளையில் பாரதி பெண் சிறுவர் இல்லம், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவில் செஞ்சோலை பெண் சிறுவர் இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment