April 20, 2014

பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில்
உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன.
தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெறுகின்றன.  காணி சுவீகரிப்பு இன்னும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, சுமுகமான நிலைமை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment