புலம்பெயர் உறவுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் முற்றுமுழுதாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடாத்தப்படவுள்ள இந்த மகாண மட்ட மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு விழா தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மாற்றுத்திறனாளிகள் நிறுவன ரீதியிலும், தமது தேவைகளை தாமே பெற்றுக் கொள்ளும் நிலைக்கும் உயர்வதற்கு இந்த விளையாட்டு விழா ஒரு படிக்கல்லாக அமையும் என்பதில் எந்தவித ஐயமில்லை.
தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியின் மூலம் பெறப்படும் நிதிகளானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதக் கொடுப்பனவு, ஒன்றுக்கு மேற்பட்ட அங்கப் பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு, அங்கம் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிப்பும், பெற்றோரை இழந்த சிறார்கள் பராமரிப்புக்கும், பல்கலைக் கழக தேர்வில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
இப்போட்டியின் மூலம் பெறப்படும் நிதியினை இவ்வேலைத் திட்டங்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து வியாபார நிறுவனங்களும் விளம்பரங்களை வழங்குமாறும், தனியார் நிறுவனங்களும் விளம்பரம் மற்றும் நிதி உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
புலம்பெயர் உறவுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் முற்றுமுழுதாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே எங்கள் அமைப்பினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முன்வருமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:
Post a Comment