July 2, 2016

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக செய்தித்தாள்களை பார்த்து தெரிந்து கொண்ட கொலையாளி…!

கொலையாளி ராம்குமாரின் தந்தை பெயர் பரமசிவம். பி.எஸ்.என்.எல். ஊழியர். அம்மா பெயர் புஷ்பம். ராம்குமாருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். அக்காள் மதுபாலா நர்சிங் முடித்து விட்டு பள்ளிக் கூடம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.


தங்கை காளீஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு தன் னார்வலர். ராம்குமார் தான் சுவாதியை கொன்ற கொலையாளி என்பது தெரிய வந்ததும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருவதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை பார்த்து, பயந்து போனார் ராம்குமார். பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், போலீசார் நடத்தி வரும் விசாரணை குறித்து, தினசரி செய்தித்தாள்களை வாங்கி படித்துள்ளார். டிவி உள்ளிட்ட பிற ஊடக செய்திகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.அவர் வீட்டில் அவர் இருந்த அறையில் செய்தி தாள்கள் சிதறி கிடந்து உள்ளன.

ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது அவர் தற்கொலை செய்ய முயன்றதை அறிந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் ராம்குமார் வீட்டு முன்பு திரண்டனர். அப்போது அங்கு வந்த இதயத்துல்லா என்பவர் ராம்குமாரை காப்பாற்றும் பணியில் போலீசாருடன் ஈடுபட்டார்.

அவர் கூறும் போது, ராம்குமார் மிகவும் அமைதியான பையன். அவன் என்ஜினீயரிங் படித்துள்ளான். சில பாடங்களில் அரியர் உள்ளது. இதனால் அவன் சென்னையில் உள்ள துணிக்கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வந்தான். அவன் இதுவரை எந்த பிரச்சினையிலும் ஈடுபட்டதில்லை’ என்றார்.

ராம்குமாரின் எதிர் வீட்டை சேர்ந்த கருத்த பாண்டி என்பவர் கூறும் போது, -‘ராம்குமார் மிகவும் ஒழுக்க மானவன். அமைதி யான அவன் எந்த பிரச்சினை யும் இல்லாதவன். யாருடனும் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டான். அவன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தால் ஆடு களை மேய்க்க செல்வான். அப்படிப்பட்ட ராம்குமார், சுவாதியை கொலை செய் திருப்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. நம்பவே முடியவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment