July 5, 2016

லசந்த கொலையாளிகளின் ஓவியப் படங்கள் மீளவும் பிரசூரம்!

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் ஓவியப் படங்கள் மீளவும் பிரசூரிக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது தடவையாக காவல்துறையினர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

35 வயது மதிக்கத் தக்க 5 அடி 8 அங்குலம் உயரமுடைய நபர் ஒருவரும், 45 வயது மதிக்கத் தக்க 5 அடி 10 அங்குலம் உடைய நபர் ஒருவரும் இவ்வாறு தேடப்படுகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவரின் தகவல்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் காவல்துறையினர் வரைந்த ஓவியப் படங்களே வெளியிடப்பட்டுள்ளன.

0718 591 753இ 0718 591 770 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது  0112 440158இ 0112 380 380 என்ற பெக்ஸ் இலக்கங்களின் ஊடாகவோ தகவலகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment