August 10, 2015

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற இலங்கை பாராளுமன்றத்தேர்தல் – 2015 தொடர்பான கருத்தமர்வு!

பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை பாராளுமன்றத் தேர்தல் – 2015 தொடர்பான கருத்தமர்வு 09.08.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்றது.
இதில் வடக்குக் கிழக்குப் பகுதியில் இன்றைய களநிலைமைகள் தொடர்பாக பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்ததுடன், தமது சந்தேகங்களை கேள்விகளாகவும் முன்வைத்தனர். இவர்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன.
புலம்பெயர் மக்கள் ஊடகங்கள் வாயிலாக தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியில் கொண்டுவரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கருத்தமர்வின் நிறைவில் ஏனைய நாடுகளின் புலம்பெயர் கட்டமைப்புகள் தமிழ்த்தேசியம் சார்ந்து அதாவது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதை வலியுறுத்தி நிற்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நிற்பதைப்போன்று நாமும் அதற்கு ஆதரவு தெரிவித்து நிற்கின்றோம் எனப் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆர்வலர்கள் பலர்கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதியோடு கருத்தமர்வு நிறைவுபெற்றது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.dcp27676767676 (2)dcp27676767676 (3)dcp27676767676 (4)dcp27676767676 (5)

No comments:

Post a Comment