August 30, 2016

கலப்பு நீதிமன்றமோ, சர்வதேச நீதிமன்றமோ கிடையாது! - உள்நாட்டு விசாரணையே நடக்கும் என்கிறார் மங்கள !

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊகடவிலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மங்கள சமரவீர, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் நிரந்தர அலுவலகம் அடுத்த மாதம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.

 
ஒக்டோபர் மாதத்தில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலத்தை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில், ஜனவரி மாதம் அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிதல் உள்ளிட்ட தகவல்களை கண்டறியும் நோக்குடன் கலந்துரையாடல் செயலணி நாடொங்கிலும் அமர்வுகளை நடத்தி வருகிறது. இந்த கலந்துரையாடல்கள் நிறைவுபெற்ற பின்னர் குறித்த சட்டமூலத்தை தயாரிக்க முடியும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பையே உள்ளடக்கி இருக்கும். அது கலப்பு நீதிமன்றத்தையோ சர்வதேச நீதிமன்றத்தையோ கொண்டிருக்காது. அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தை முன்னிட்டே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் அமைக்கப்படுவதாக வதந்திகள் பரவாது.

அரசாங்கத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் சட்டமூலத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து நன்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment