சந்திரிகா ஆட்சி காலத்தில் இலங்கை விமானப்படையினால் சென்.பீற்றர்ஸ் தேவாலையம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் என்பவற்றின் மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேருடைய 20 ஆம் ஆண்டு நினைவு தினம்
நாளை மறுதினம் 9 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாராநாயக்காவின் வழிநடத்தலில் 1995 ஆம் ஆண்டு இதே நாளில் மேற்படித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இராணுவ முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தேவாலையங்கள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் தஞ்சம் புகந்திருந்தனர். அப்போதைய சந்திரிக்காவின் அரசாங்கம் மக்கள் மத்தியில் விமானத் தாக்குதல் மற்றும் செல் தாக்குதல்களை தொடுத்திருந்தது.
இதன் ஒரு அங்கமாகவே அன்று மாலை 5.45 மணியளவில் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலையம், முரக மூர்த்தி ஆலயம் என்பவற்றின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இச் சம்பவத்தில் 147 பேர் கொல்லப்பட்டதுடன், 360 ற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment