அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் மீண்டும்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது என
முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்:-
வெளி நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. இந்த நிலையில் அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களின் செயற்பாட்டிலேயே இக்கேள்விக்கு பதிலுண்டு எனத் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். முன்னைய அரசாங்கம், கே.பி, கருணா அம்மான், பிள்ளையான், எமில் காந்தன் ஆகிய புலித் தலைவர்களுக்கு செல்லம் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இவர்கள் தவறிவிட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment