கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட
ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000
விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாலியல்
வன்கொடுமைகளுக்கும்
வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் அவர்களது இள வயது பெண்கள் இராணுவத்தினருடனான கட்டாயத் திருமணத்திற்கும் முகம் கொடுக்கும் நிலை உள்ளது.
பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சானல் 4 வெளியிட்ட ஆவணப்படமான “இலங்கையின்
கொலைக் களம்“ காட்டிய காட்சிகளில், இறந்த தமிழ்ப் பெண்களின் உடைகள் கூட
களையப்பட்டு, பின்னணியில் சிங்கள மொழியில் மோசமான பாலியல் ரீதியான
உரையாடல்களுடன், அப்பெண்களின் இறந்த உடல்கள் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டது வெளியானது. இலங்கை அரசின் ஆயுதப் படையினரின் கொடூரம்
அந்த அளவிலானது.
தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண்களின் நிலை உடலளவில், பொருளாதார நிலையில், சமூக அளவில் மேலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. அவர்கள் தொடர்ந்த உளவியல் அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேவைக்கு மிக அதிகமான ஆயுதப் படையினரின் இருப்பே ஆகும்.
இலங்கையில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் நடைபெறும் "திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள் " மாநாடு .
இவ் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஈழத்து பெண்கள் மற்றும் வேற்றின பெண்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் .
தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி
வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் அவர்களது இள வயது பெண்கள் இராணுவத்தினருடனான கட்டாயத் திருமணத்திற்கும் முகம் கொடுக்கும் நிலை உள்ளது.
தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண்களின் நிலை உடலளவில், பொருளாதார நிலையில், சமூக அளவில் மேலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. அவர்கள் தொடர்ந்த உளவியல் அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேவைக்கு மிக அதிகமான ஆயுதப் படையினரின் இருப்பே ஆகும்.
இலங்கையில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் நடைபெறும் "திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள் " மாநாடு .
இவ் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஈழத்து பெண்கள் மற்றும் வேற்றின பெண்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் .
தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி
No comments:
Post a Comment