புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை நீடிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
இன்றைய தினம் இவ்வழக்கில் எந்த விடயங்களும் ஆராயப்படாமல், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை நீதவான் விரைவாக முடித்தார்.
மேலும் குறித்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி அன்று மேல் நீதிமன்றத்தில் முக்கிய முடிவு ஒன்று எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment