July 5, 2016

வாஸ் குணவர்தனவின் மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் மனைவி ஆகியோரக்கு  எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.



இவர்களுடன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் ஐந்து பேருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலங்கைத் தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர் ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன மற்றும் அவரது மனைவி சியாமலி குணவர்தன ஆகியோருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நிபுன தனுஸ்க ராமநாயக்க என்ற மாணவரை கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment