June 5, 2015

வட்டமடுவில் விவசாயிகள்- பொலிசார் முறுகல்!

அம்­பாறையின் வட்­ட­மடு பிர­தே­சத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை விவ­சா­யி­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்­கி­மி­டையில் முறுகல் நிலை­ ஏற்­பட்­டுள்ளது. தமக்கு சொந்­த­மான காணி­களில் வட்­ட­மடு பிர­தேச விவ­சா­யிகள் உழவு நட­வ­டிக்­
கையில் ஈடு­பட்டுக்கொண்­டி­ருந்த சமயத்தில், அங்கு வந்த பொலிசார் அதனை தடுக்க முற்பட்டதால் இந்த முறுகல் ஏற்பட்டது. முறுகல் முற்றி அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இத­னை­ய­டுத்து அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஏ.எல்.தவம் மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஹேமந்த டிகோ­விட்ட, திருக்­கோவில் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி யுபி.தென்­னக் கோன், அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர் கொண்ட குழு­வினர் களத்­திற்கு விஜ­ய­ம் மேற்­கொண்­டி­ருந்­தனர்.
வட்­ட­மடு விவ­சா­யி­க­ளுக்கும், கால்­நடை வளர்ப்­பா­ளர்­க­ளுக்­கு­மி­டை­யிலான பிரச்­சி­னைகள் பல வரு­டங்­க­ளாகத் தொடர்ந்து செல்­வ­துடன், இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் பொத்­துவில் நீதிவான் நீதி­மன்றம் மற்றும் கல்­முனை மேல்­நீ­தி­மன்றம் ஆகி­ய­வற்றில் வழக்­குகள் தொட­ரப்­பட்டு இறு­தி­யாக தற்­போது மேன்­மு­றை­யீட்டு நீதி­ம­ன்­றத்தில் இதற்­கான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
கல்­முனை மேல்­நீ­தி­மன்­றத்­தினால் விவ­சாயம் செய்­வ­தற்கு விதிக்­கப்­பட்ட தடையை எதிர்த்து வட்­ட­மடு விவ­சா­யி­க ளினால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட வழக்­கு விசா­ரணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்போது கல்­முனை மேல்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு கடந்த பெப்­ர­வரி மாதம் 12 ஆம் திகதி முதல் 05.05.2015 வரையும், பின்னர் அதி­லி­ருந்து எதிர்­வரும் ஜூலை ­மாதம் 12 ஆம் திகதி வரை விவ­சாயம் மேற்­கொள்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ள­தனை சட்­டத்­த­ரணி எஸ்.எம்.றகீப் பொலிஸ் அதி­கா­ரி­களின் கவனத்திற்கு இதன்போது கொண்டுவந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமனந்த டிகோவிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, நிலைமை சுமுகமடைந்தது.

No comments:

Post a Comment