முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றுமொரு பாதயாத்திரைப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அடுத்த கட்ட பாதயாத்திரைப் போராட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட உள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி இந்த பாதயாத்திரைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கொழும்பு முதல் மாத்தறை வரையிலான பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த பாதயாத்திரையை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரையின் போது இனவாத அடிப்படையிலான கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டது.
எனவே இவ்வாறான முரண்பாடுகளை தவிர்க்க கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் பின்னர் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment